• Nov 24 2024

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு - கொழும்பில் இடம்பெறவுள்ள விசேட பேச்சுவார்த்தை

Chithra / Oct 13th 2024, 11:39 am
image



இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் புதிய முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுக்களுக்கிடையில் எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயத்தின்போது இந்த பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. 

குறிப்பாக, தென்னிந்திய மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடிப்பதால், இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றமை தொடர்பில் அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.  

அதற்கமைய இந்த விவகாரம் இரு தரப்புக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும், இம்மாதம் 29ஆம் திகதி இலங்கை, இந்திய கடற்றொழில் அமைச்சுக்களுக்கு இடையில் 6ஆவது தடவையாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அதன் ஊடாக இருதரப்பு இணக்கப்பாட்டுடன் பொது தீர்வொன்றை எட்டுவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு - கொழும்பில் இடம்பெறவுள்ள விசேட பேச்சுவார்த்தை இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் புதிய முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுக்களுக்கிடையில் எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயத்தின்போது இந்த பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, தென்னிந்திய மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடிப்பதால், இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றமை தொடர்பில் அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.  அதற்கமைய இந்த விவகாரம் இரு தரப்புக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும், இம்மாதம் 29ஆம் திகதி இலங்கை, இந்திய கடற்றொழில் அமைச்சுக்களுக்கு இடையில் 6ஆவது தடவையாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அதன் ஊடாக இருதரப்பு இணக்கப்பாட்டுடன் பொது தீர்வொன்றை எட்டுவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement