• Nov 23 2024

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை...! நாளை முதல் ஆரம்பம்...!samugammedia

Sharmi / Dec 21st 2023, 11:33 am
image

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட பஸ் மற்றும் புகையிரத சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் கிராமப்புறங்களுக்கு செல்லும் மக்களுக்காக இந்த சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை இயக்கப்படும்.

இதன்படி நாளை (22) முதல் 100 மேலதிக பஸ்கள் நீண்ட தூர சேவைகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தவும் பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை. நாளை முதல் ஆரம்பம்.samugammedia எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட பஸ் மற்றும் புகையிரத சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் கிராமப்புறங்களுக்கு செல்லும் மக்களுக்காக இந்த சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை இயக்கப்படும்.இதன்படி நாளை (22) முதல் 100 மேலதிக பஸ்கள் நீண்ட தூர சேவைகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தவும் பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement