• Sep 23 2024

கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு!

Chithra / Jan 14th 2023, 10:14 am
image

Advertisement

அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயர்கள், மெல்லிய நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.

இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மூலக்கூறுகள், சுவாசப்பாதையிலேயே வைரசை தடுத்து விடும். அதன்மூலம், அது நுரையீரலை அடைவது தடுக்கப்பட்டு, கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம்.

இவர்கள் கண்டுபிடித்த மூலக்கூறுகள், பஞ்சு போல் செயல்பட்டு, கொரோனா வைரசையும், இதர வைரஸ்களையும் உறிஞ்சி விடும். அதனால், அந்த வைரஸ்கள், மேற்கொண்டு உடலுக்குள் பயணிப்பது தடுக்கப்படும்.

இந்த மூலக்கூறுகளை மூக்கு வழியாக 'ஸ்பிரே' போல் பயன்படுத்தலாம். வாய் வழியாகவும் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதை சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. மூலக்கூறு இழைகள், சுண்டெலியின் நுரையீரலில் 24 மணி நேரம்வரை இருந்தபோதிலும், நுரையீரலில் எரிச்சலோ, பாதிப்போ ஏற்படவில்லை.


கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயர்கள், மெல்லிய நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர்.பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மூலக்கூறுகள், சுவாசப்பாதையிலேயே வைரசை தடுத்து விடும். அதன்மூலம், அது நுரையீரலை அடைவது தடுக்கப்பட்டு, கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம்.இவர்கள் கண்டுபிடித்த மூலக்கூறுகள், பஞ்சு போல் செயல்பட்டு, கொரோனா வைரசையும், இதர வைரஸ்களையும் உறிஞ்சி விடும். அதனால், அந்த வைரஸ்கள், மேற்கொண்டு உடலுக்குள் பயணிப்பது தடுக்கப்படும்.இந்த மூலக்கூறுகளை மூக்கு வழியாக 'ஸ்பிரே' போல் பயன்படுத்தலாம். வாய் வழியாகவும் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.இதை சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. மூலக்கூறு இழைகள், சுண்டெலியின் நுரையீரலில் 24 மணி நேரம்வரை இருந்தபோதிலும், நுரையீரலில் எரிச்சலோ, பாதிப்போ ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement