• Nov 06 2024

இலங்கை வந்த அவுஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம் - உதவுவோருக்கு 5,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதி

Chithra / May 29th 2024, 3:18 pm
image

Advertisement

 

சுற்றுலாவுக்காக இலங்கை வந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவரின் பணப்பை திருடப்பட்டுள்ளதாக கொழும்பு  கோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண், யூடியூப் சேனல் ஒன்றினை நடாத்தி வருவதாகவும் அதில் காணொளிகளை பதிவிட  கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், கொழும்பில் இருந்து எல்ல பிரதேசத்திற்கு செல்வதற்காக பேருந்து ஒன்றில் பயணம் செய்த போதே அவரின் பணப்பை இரு நபர்களால் திருடப்பட்டுள்ளது.

இது அந்த பேருந்தில் இருந்த சிசிரிவி கமராவலும் பதிவாகியுள்ளது.

திருடப்பட்ட அவரின் பணப்பையில், 2,000 அமெரிக்க டொலர்கள், விமான டிக்கெட், கமரா மற்றும் மடிக்கணனி போன்ற பொருட்கள் இருந்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருடப்பட்ட பையை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பவருக்கு 5,000 அமெரிக்க டொலர்களை வெகுமதியாக தரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இலங்கை வந்த அவுஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம் - உதவுவோருக்கு 5,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதி  சுற்றுலாவுக்காக இலங்கை வந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவரின் பணப்பை திருடப்பட்டுள்ளதாக கொழும்பு  கோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த பெண், யூடியூப் சேனல் ஒன்றினை நடாத்தி வருவதாகவும் அதில் காணொளிகளை பதிவிட  கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், கொழும்பில் இருந்து எல்ல பிரதேசத்திற்கு செல்வதற்காக பேருந்து ஒன்றில் பயணம் செய்த போதே அவரின் பணப்பை இரு நபர்களால் திருடப்பட்டுள்ளது.இது அந்த பேருந்தில் இருந்த சிசிரிவி கமராவலும் பதிவாகியுள்ளது.திருடப்பட்ட அவரின் பணப்பையில், 2,000 அமெரிக்க டொலர்கள், விமான டிக்கெட், கமரா மற்றும் மடிக்கணனி போன்ற பொருட்கள் இருந்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.அத்துடன், திருடப்பட்ட பையை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பவருக்கு 5,000 அமெரிக்க டொலர்களை வெகுமதியாக தரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement