• Sep 21 2024

இலங்கையில் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாற்றுக்கும் வருகிறது தடை..!

Chithra / Jan 15th 2024, 1:18 pm
image

Advertisement

 

சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு ஆகியவற்றின் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும் என, மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, இது தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என, மேற்படி குழுவின் தலைவர் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் வகையில், 

“லஞ்ச் ஷீட்” பாவனையைத் தடை செய்வது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும், துறைசார் கண்காணிப்புக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், “லஞ்ச் ஷீட்”களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு, மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு, இக்குழு பரிந்துரைகளை வழங்கியது. 

அதைக் கடைப்பிடிக்க ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

இலங்கையில் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாற்றுக்கும் வருகிறது தடை.  சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு ஆகியவற்றின் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும் என, மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதன்படி, இது தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என, மேற்படி குழுவின் தலைவர் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.இதேவேளை, பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் வகையில், “லஞ்ச் ஷீட்” பாவனையைத் தடை செய்வது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும், துறைசார் கண்காணிப்புக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், “லஞ்ச் ஷீட்”களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு, மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு, இக்குழு பரிந்துரைகளை வழங்கியது. அதைக் கடைப்பிடிக்க ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement