• Sep 20 2024

பேராபத்தில் சிக்கிய இலங்கை...வெளியான அதிர்ச்சித் தகவல்...!samugammedia

Sharmi / Apr 25th 2023, 10:55 am
image

Advertisement

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகள் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்களின் இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அரசாங்கத்திற்கு இதனை தெரியப்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய வெளிநடவடிக்கை சேவை ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் துணை நிர்வாக இயக்குநர் பாலா பம்பிலோனி இலங்கையின் வெளிவிவகார அமைச்சிற்கு எழுதிய கடிதத்தில் உத்தேச பயங்கரவா எதிர்ப்பு சட்டம் குறித்த தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

புதிய சட்டமூலம் குறித்த தனது அதிருப்தியை இலங்கை - அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்க மூலமாக அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

இதேவேளை உத்தேச சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால் ஜிஎஸ்பி பிளஸ் போன்ற வர்த்தக நடவடிக்கைகளிற்கு பாதிப்பு ஏற்படலாம் என பிரிட்டனின் அதிகாரிகள் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜயவர்த்தன ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

இதேவேளை 17ம் திகதி அதிபருடனான சந்திப்பின்போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வெளிப்படுத்தும் விடயங்கள் ஜிஎஸ்பி சலுகை தொடர்பான விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பேராபத்தில் சிக்கிய இலங்கை.வெளியான அதிர்ச்சித் தகவல்.samugammedia உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகள் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்களின் இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அரசாங்கத்திற்கு இதனை தெரியப்படுத்தியுள்ளன. ஐரோப்பிய வெளிநடவடிக்கை சேவை ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் துணை நிர்வாக இயக்குநர் பாலா பம்பிலோனி இலங்கையின் வெளிவிவகார அமைச்சிற்கு எழுதிய கடிதத்தில் உத்தேச பயங்கரவா எதிர்ப்பு சட்டம் குறித்த தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். புதிய சட்டமூலம் குறித்த தனது அதிருப்தியை இலங்கை - அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்க மூலமாக அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. இதேவேளை உத்தேச சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால் ஜிஎஸ்பி பிளஸ் போன்ற வர்த்தக நடவடிக்கைகளிற்கு பாதிப்பு ஏற்படலாம் என பிரிட்டனின் அதிகாரிகள் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜயவர்த்தன ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. இதேவேளை 17ம் திகதி அதிபருடனான சந்திப்பின்போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வெளிப்படுத்தும் விடயங்கள் ஜிஎஸ்பி சலுகை தொடர்பான விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement