• May 17 2024

ஹர்த்தாலால் வடக்கு - கிழக்கில் இயல்பு நிலையில் மாற்றம்! - பல சேவைகள் ஸ்தம்பிதம்!

Chithra / Apr 25th 2023, 10:56 am
image

Advertisement

வடமாகாணம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்திற்க்கு மன்னார் மாவட்ட வர்த்தக சங்கங்கள், மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், பொது மக்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவு வழங்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டம் முழுவதும் முற்றாக முடங்கியுள்ளது

இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள தினைக்களம் தமிழ் முஸ்லீம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை கிழக்கில் மேய்ச்சல் தரவைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்த கோரியும், தஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம் பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றையதினம் (25) செவ்வாய் கிழமை வடமாகணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுருந்தது

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம் பெற்ற போதிலும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


---

கிளிநொச்சி மாவட்டத்தின் நாளாந்த செயற்பாடுகளும் கர்த்தாலால் முடங்கியது.


---

பொது முடக்கம் காரணமாக வாழைச்சேனையில் வர்த்தக நிலையங்கள் ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது.

வாழைச்சேனையிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மூடிக் காணப்பட்டதுடன், மீன் சந்தை, மரக்கறி, பழக்கடைகள் திறந்து காணப்பட்டது.

அத்தோடு அரச திணைக்களங்கள், வங்கிகள் இயங்குவதையும், தனியார் வங்கிகள் சில மூடிக் காணப்படுவதையும் காண முடித்தது.

தமிழ் பகுதியிலுள்ள பாடசாலைகள் இயங்கினாலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதுடன், போக்குவரத்துக்குகள் வழமை போன்று இயங்குகின்றது.

வாழைச்சேனை பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் வியாபாரிகள் பொது முடக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


---

யாழ்ப்பாண நகரம் முழுமையாக முடங்கியது.

சங்கானை பகுதியிலும் கடைகள் மூடப்பட்டமையால் சங்கானையும் முடங்கியது.

அதுபோல மானிப்பாயிலும் கடையடைப்பு முன்னெடுத்ததால் மானிப்பாயும் முடங்கியது.

பருத்தித்துறை நகரும் முழுதாக முடங்கியுள்ளது. இதேவேளை ஒரே ஒரு உணவகம் மட்டும் திறந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து இடம் பெறுகிறது.

வர்த்க நிலையங்கள், மரக்கறி மீன் சந்தை உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமும் குறைவாகவே காணப்படுகிறது.


ஹர்த்தாலால் வடக்கு - கிழக்கில் இயல்பு நிலையில் மாற்றம் - பல சேவைகள் ஸ்தம்பிதம் வடமாகாணம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்திற்க்கு மன்னார் மாவட்ட வர்த்தக சங்கங்கள், மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், பொது மக்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவு வழங்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டம் முழுவதும் முற்றாக முடங்கியுள்ளதுஇலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள தினைக்களம் தமிழ் முஸ்லீம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை கிழக்கில் மேய்ச்சல் தரவைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்த கோரியும், தஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம் பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றையதினம் (25) செவ்வாய் கிழமை வடமாகணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுருந்ததுஇந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம் பெற்ற போதிலும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.---கிளிநொச்சி மாவட்டத்தின் நாளாந்த செயற்பாடுகளும் கர்த்தாலால் முடங்கியது.---பொது முடக்கம் காரணமாக வாழைச்சேனையில் வர்த்தக நிலையங்கள் ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது.வாழைச்சேனையிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மூடிக் காணப்பட்டதுடன், மீன் சந்தை, மரக்கறி, பழக்கடைகள் திறந்து காணப்பட்டது.அத்தோடு அரச திணைக்களங்கள், வங்கிகள் இயங்குவதையும், தனியார் வங்கிகள் சில மூடிக் காணப்படுவதையும் காண முடித்தது.தமிழ் பகுதியிலுள்ள பாடசாலைகள் இயங்கினாலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதுடன், போக்குவரத்துக்குகள் வழமை போன்று இயங்குகின்றது.வாழைச்சேனை பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் வியாபாரிகள் பொது முடக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.---யாழ்ப்பாண நகரம் முழுமையாக முடங்கியது.சங்கானை பகுதியிலும் கடைகள் மூடப்பட்டமையால் சங்கானையும் முடங்கியது.அதுபோல மானிப்பாயிலும் கடையடைப்பு முன்னெடுத்ததால் மானிப்பாயும் முடங்கியது.பருத்தித்துறை நகரும் முழுதாக முடங்கியுள்ளது. இதேவேளை ஒரே ஒரு உணவகம் மட்டும் திறந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து இடம் பெறுகிறது.வர்த்க நிலையங்கள், மரக்கறி மீன் சந்தை உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமும் குறைவாகவே காணப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement