இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
நாங்கள் வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை இருப்பினும், சில அரசியல்வாதிகள் கடன் அதிகரித்துள்ளதாக பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.
எங்கள் கடன்கள் டொலர்களில் கூறப்படும்போது கடன் ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
அவர்கள் இவ்வாறு பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் போன்ற ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டமும் எதிர்க்கப்பட்டது. சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்த போது, மொனாஷ் பல்கலைக்கழகம் இலங்கைக்கு வந்து ஆனால் தனியார் கல்வியை அனுமதிக்க முடியாது என்று கூறி அப்போது அனுமதிக்கப்படவில்லை.
அந்த பல்கலைக்கழகம் மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது இன்று அது மலேசியா பிராந்தியத்தில் ஒரு கல்வி மையமாக மாறியுள்ளது, இது பில்லியன் கணக்கான டொலர்களை வருவாயை ஈட்டுகிறது.
JPV யின் செயற்பாடுகள் இவ்வாறு தொடர்ந்தால் இந்த நாட்டைகட்டியெழுப்ப முடியாது என அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.
இலங்கை எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை அமைச்சர் மனுஷ வெளியிட்ட தகவல் இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.நாங்கள் வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை இருப்பினும், சில அரசியல்வாதிகள் கடன் அதிகரித்துள்ளதாக பகிரங்கமாக தெரிவிக்கின்றனர். எங்கள் கடன்கள் டொலர்களில் கூறப்படும்போது கடன் ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இவ்வாறு பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் போன்ற ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டமும் எதிர்க்கப்பட்டது. சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்த போது, மொனாஷ் பல்கலைக்கழகம் இலங்கைக்கு வந்து ஆனால் தனியார் கல்வியை அனுமதிக்க முடியாது என்று கூறி அப்போது அனுமதிக்கப்படவில்லை.அந்த பல்கலைக்கழகம் மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது இன்று அது மலேசியா பிராந்தியத்தில் ஒரு கல்வி மையமாக மாறியுள்ளது, இது பில்லியன் கணக்கான டொலர்களை வருவாயை ஈட்டுகிறது. JPV யின் செயற்பாடுகள் இவ்வாறு தொடர்ந்தால் இந்த நாட்டைகட்டியெழுப்ப முடியாது என அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.