இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் வரலாற்றில் முதற் தடவையாக வெளிநாட்டுக்கு நேற்று (29) ஏற்றுமதி செய்யப்பட்டன.
புத்தளம் - மதுரங்குளியில் உள்ள "ஓஷன் ஃபூட்" தொழிற்சாலை வளாகத்தில் குறித்த டின் மீன்களின் ஒரு தொகுதி் உத்தியோகபூர்வமாக ஏற்றுமதி செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு இந்த டின் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மீன்வளம், மீன்பிடி, நீரியவள மற்றும் கடல்வள இராஜாங்க அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித. கிஹான், மீன்பிடி, நீரியவள மற்றும் கடல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக, மீன்பிடி, நீரியவள மற்றும் கடல்வள அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் சுசந்த கஹவத்த, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் குமுது மெகஹகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், டின் மீன்களை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி உரிமத்தை ஓஷன் ஃபூட் தொழிற்சாலை நிர்வாகத்திடம் இராஜாங்க அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக கைளிக்கப்பட்டது.
மேலும், டின் மீன் தொழிற்சாலை வளாகத்தை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், தொழிற்சாலைக்பான புதிய சிற்றூண்டிச்சாலையையும் திறந்து வைத்தனர்.
இலங்கையில் இருந்து முதற்தடவையாக டின் மீன் ஏற்றுமதி இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் வரலாற்றில் முதற் தடவையாக வெளிநாட்டுக்கு நேற்று (29) ஏற்றுமதி செய்யப்பட்டன.புத்தளம் - மதுரங்குளியில் உள்ள "ஓஷன் ஃபூட்" தொழிற்சாலை வளாகத்தில் குறித்த டின் மீன்களின் ஒரு தொகுதி் உத்தியோகபூர்வமாக ஏற்றுமதி செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு இந்த டின் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.மீன்வளம், மீன்பிடி, நீரியவள மற்றும் கடல்வள இராஜாங்க அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித. கிஹான், மீன்பிடி, நீரியவள மற்றும் கடல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக, மீன்பிடி, நீரியவள மற்றும் கடல்வள அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் சுசந்த கஹவத்த, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் குமுது மெகஹகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.அத்துடன், டின் மீன்களை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி உரிமத்தை ஓஷன் ஃபூட் தொழிற்சாலை நிர்வாகத்திடம் இராஜாங்க அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக கைளிக்கப்பட்டது.மேலும், டின் மீன் தொழிற்சாலை வளாகத்தை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், தொழிற்சாலைக்பான புதிய சிற்றூண்டிச்சாலையையும் திறந்து வைத்தனர்.