• Nov 14 2024

இலங்கையின் கடன் திட்டம் - விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் IMF குழு!

IMF
Chithra / Nov 1st 2024, 9:54 am
image

 

இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என IMF ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இன்று (01) நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மற்றும் குழுவினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இது தொடர்பான கலந்துரையாடல்களுக்காக இலங்கைக் குழுவொன்று வாஷிங்டனுக்கு வந்துள்ளதாகவும், இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையின் கடன் திட்டம் - விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் IMF குழு  இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என IMF ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியம் இன்று (01) நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மற்றும் குழுவினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.இது தொடர்பான கலந்துரையாடல்களுக்காக இலங்கைக் குழுவொன்று வாஷிங்டனுக்கு வந்துள்ளதாகவும், இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement