• Nov 24 2024

அதிகரித்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் - சிறப்பு பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிக்க திட்டமிடும் இலங்கை

Chithra / Jun 30th 2024, 1:33 pm
image



சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு சிறப்பு பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கு ஐ.நா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இலங்கை தயாராகவுள்ளதாகவும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொலிஸ்மா அதிபர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்முறையான மோதல்களின் எழுச்சி மோதல் வலயங்களில் பொதுமக்களின் அவலநிலை, சைபர் கிரைம், ஆயுதமயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் போன்ற பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களின் தோற்றம் உட்பட சர்வதேச ரீதியாக பாதுகாப்பு சவால்களின் அதிகரித்து வருகின்றமையானது சிக்கலான தன்மைகளை அனைத்து நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கும்பல்களின் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமை சர்வதேச அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

சர்வதேச பாதுகாப்புக்காக இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்ந்தும் இருக்கும் என்பதோடு தற்போது தயார் நிலையில் இலங்கை பொலிஸ் பிரிவு உள்ளது. 

அத்துடன் இலங்கை பொலிஸ் பிரிவு தரம் மூன்றிலும் காணப்படுகின்றமை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கும்பல் வன்முறைகளின் அதிகரித்துவரும் அச்சுறுத்தலை சமாளிக்க விசேட பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிப்பதோடு நிலைநிறுத்துவது பற்றி ஐக்கிய நாடுகள் பரிசீலனை செய்ய வேண்டும்.என்றார்.

அதிகரித்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் - சிறப்பு பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிக்க திட்டமிடும் இலங்கை சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு சிறப்பு பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கு ஐ.நா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இலங்கை தயாராகவுள்ளதாகவும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொலிஸ்மா அதிபர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வன்முறையான மோதல்களின் எழுச்சி மோதல் வலயங்களில் பொதுமக்களின் அவலநிலை, சைபர் கிரைம், ஆயுதமயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் போன்ற பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களின் தோற்றம் உட்பட சர்வதேச ரீதியாக பாதுகாப்பு சவால்களின் அதிகரித்து வருகின்றமையானது சிக்கலான தன்மைகளை அனைத்து நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கும்பல்களின் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமை சர்வதேச அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.சர்வதேச பாதுகாப்புக்காக இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்ந்தும் இருக்கும் என்பதோடு தற்போது தயார் நிலையில் இலங்கை பொலிஸ் பிரிவு உள்ளது. அத்துடன் இலங்கை பொலிஸ் பிரிவு தரம் மூன்றிலும் காணப்படுகின்றமை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாக உள்ளது.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கும்பல் வன்முறைகளின் அதிகரித்துவரும் அச்சுறுத்தலை சமாளிக்க விசேட பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிப்பதோடு நிலைநிறுத்துவது பற்றி ஐக்கிய நாடுகள் பரிசீலனை செய்ய வேண்டும்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement