• Feb 09 2025

சவுதியிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள பேரீச்சம்பழங்கள்

Chithra / Jan 23rd 2025, 9:21 am
image

 

 எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு  சவுதி அரேபியா, இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்நிலையில் பேரீச்சம் பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும்,

அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறியுள்ளார்.

ரமழான் நோன்பு கடைபிடிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு பிடிப்பார்கள், இவ்வாறான நோன்பு காலங்களில் பேரீச்சம் பழங்கள் முக்கியமான ஒரு உணவு பொருளாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சவுதியிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள பேரீச்சம்பழங்கள்   எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு  சவுதி அரேபியா, இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.இந்நிலையில் பேரீச்சம் பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும்,அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறியுள்ளார்.ரமழான் நோன்பு கடைபிடிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு பிடிப்பார்கள், இவ்வாறான நோன்பு காலங்களில் பேரீச்சம் பழங்கள் முக்கியமான ஒரு உணவு பொருளாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement