இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மானியங்களை வழங்கும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள், மின்சாரம், உரம் போன்றவைகளை மீண்டும் மானிய அடிப்படையில் வழங்குவது இலங்கையை பின்னோக்கி இழுக்கும் ஒரு நடவடிக்கை. இது ஒரு நீடித்து நிலைக்க முடியாத செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.
மானியங்களை வழங்குவது தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நடவடிக்கை, அதற்கான நிதி எங்களிடம் இல்லை.
வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்று மானியங்களை வழங்குவது மீண்டும் கடன்நெருக்கடிக்குள் சிக்கவைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் கடனை திருப்பி செலுத்துவதற்கான அந்திய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான திறமை எங்களிடம் இல்லை.
அஸ்வசுமா போன்றவற்றை குறுகிய கால நன்மைக்காக பயன்படுத்தலாம்.
அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இவ்வாறான திட்டங்கள் உதவக்கூடும், சீர்திருத்தங்களிற்கான ஆதரவை பெற உதவக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பழைய தவறுகளை செய்யும் இலங்கை; மானியங்கள் தேவையில்லை முக்கியஸ்தர் எச்சரிக்கை இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கவலை வெளியிட்டுள்ளார்.இலங்கை மானியங்களை வழங்கும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.எரிபொருள், மின்சாரம், உரம் போன்றவைகளை மீண்டும் மானிய அடிப்படையில் வழங்குவது இலங்கையை பின்னோக்கி இழுக்கும் ஒரு நடவடிக்கை. இது ஒரு நீடித்து நிலைக்க முடியாத செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.மானியங்களை வழங்குவது தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நடவடிக்கை, அதற்கான நிதி எங்களிடம் இல்லை. வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்று மானியங்களை வழங்குவது மீண்டும் கடன்நெருக்கடிக்குள் சிக்கவைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.ஏனென்றால் கடனை திருப்பி செலுத்துவதற்கான அந்திய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான திறமை எங்களிடம் இல்லை.அஸ்வசுமா போன்றவற்றை குறுகிய கால நன்மைக்காக பயன்படுத்தலாம்.அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இவ்வாறான திட்டங்கள் உதவக்கூடும், சீர்திருத்தங்களிற்கான ஆதரவை பெற உதவக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.