• Nov 26 2024

பொருளாதார சவால்களில் இருந்து உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கும் இலங்கை..! – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Chithra / Mar 31st 2024, 9:26 am
image


வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில்,  தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பல்லின சமூகமாக வாழும் நாடு என்ற வகையில் இலங்கை தற்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். 

எனவே, இலங்கையர்களாகிய நாம் எமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுடன், அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சக்திகளிடமும் சிக்கிக்கொள்ளாமல், அறிவுபூர்வமாக நாட்டின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக அர்பணிக்க வேண்டியது அவசிமாகும். 

இலங்கை கிறிஸ்தவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் ஈஸ்டர் காலம் ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதலை கண்டிருந்தது. 

அந்த மோசமான நினைவுகள் எமது மனங்களில் இருந்து மறையாது.  அதேநேரம் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் பாரபட்சம் இன்றியும் சட்ட அமுல்படுத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன் இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும் வகையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய  அரசாங்கம் அர்ப்பணிக்கும்.

அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் நாளாகட்டும் என பிராத்திப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


பொருளாதார சவால்களில் இருந்து உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கும் இலங்கை. – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில்,  தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.பல்லின சமூகமாக வாழும் நாடு என்ற வகையில் இலங்கை தற்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். எனவே, இலங்கையர்களாகிய நாம் எமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுடன், அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சக்திகளிடமும் சிக்கிக்கொள்ளாமல், அறிவுபூர்வமாக நாட்டின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக அர்பணிக்க வேண்டியது அவசிமாகும். இலங்கை கிறிஸ்தவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் ஈஸ்டர் காலம் ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதலை கண்டிருந்தது. அந்த மோசமான நினைவுகள் எமது மனங்களில் இருந்து மறையாது.  அதேநேரம் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் பாரபட்சம் இன்றியும் சட்ட அமுல்படுத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன் இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும் வகையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய  அரசாங்கம் அர்ப்பணிக்கும்.அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் நாளாகட்டும் என பிராத்திப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement