• Apr 27 2024

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்திற்கு தடையுத்தரவு!

Tamil nila / Mar 25th 2024, 7:22 pm
image

Advertisement

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம்,  2023-2024 இரண்டு நாள் போட்டிகளில் விளையாடிய நான்கு பாடசாலை அணிகளை தரமிறக்க திட்டமிட்டுள்ள செயல்முறை நியாயமற்றது மற்றும் பிழையானது என்று கூறி 05 பாடசாலைகளால் பாடசாலை கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அண்மையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு ஆனந்த வித்தியாலயம், அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயம்,வென்னப்புவ ஜோசப் வாஸ் வித்தியாலயம் , புனித செபஸ்தியன் வித்தியாலயம் கட்டுனேரிய மற்றும் கண்டி புனித சில்வெஸ்டர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தமை 

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​2023-24 போட்டித் தொடரின் ஒரு பிரிவில் விளையாடிய நான்கு பாடசாலைகளைத் தரமிறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ரிலிகேஷன் போட்டிகளை" நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக தடை உத்தரவு பிறப்பித்தது.

மேலும் குறித்த தடை உத்தரவு ஏப்ரல் 8 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனவும், அன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்திற்கு தடையுத்தரவு இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம்,  2023-2024 இரண்டு நாள் போட்டிகளில் விளையாடிய நான்கு பாடசாலை அணிகளை தரமிறக்க திட்டமிட்டுள்ள செயல்முறை நியாயமற்றது மற்றும் பிழையானது என்று கூறி 05 பாடசாலைகளால் பாடசாலை கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அண்மையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.கொழும்பு ஆனந்த வித்தியாலயம், அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயம்,வென்னப்புவ ஜோசப் வாஸ் வித்தியாலயம் , புனித செபஸ்தியன் வித்தியாலயம் கட்டுனேரிய மற்றும் கண்டி புனித சில்வெஸ்டர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தமை இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​2023-24 போட்டித் தொடரின் ஒரு பிரிவில் விளையாடிய நான்கு பாடசாலைகளைத் தரமிறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ரிலிகேஷன் போட்டிகளை" நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக தடை உத்தரவு பிறப்பித்தது.மேலும் குறித்த தடை உத்தரவு ஏப்ரல் 8 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனவும், அன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement