• Mar 21 2025

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை பின்னடைவு!

Chithra / Mar 20th 2025, 12:40 pm
image


இன்று மார்ச் 20 ஆம் திகதி உலக மகிழ்ச்சி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2024ம் ஆண்டு மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 128 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது. 

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. 

மற்றவர்கள் மீதான நம்பிக்கை, எதிர்காலம் மீதான நம்பிக்கை, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக பின்லாந்து மக்கள் ஏனையவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக வருடாந்த மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதேவேளை இஸ்ரேல் 8 ஆவது இடத்தில் உள்ளது. 

ஹமாஸுடனான மோதலால் இஸ்ரேல் பாதிக்கப்பட்ட போதிலும் 8ஆவது இடத்தில் உள்ளது. 

மேலும் 147 ஆவது இடத்தில் தற்போது தாலிபான்களின் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் இடம்பிடித்துள்ளது. 

இதேவேளை இலங்கை 128ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை பின்னடைவு இன்று மார்ச் 20 ஆம் திகதி உலக மகிழ்ச்சி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2024ம் ஆண்டு மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 128 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. மற்றவர்கள் மீதான நம்பிக்கை, எதிர்காலம் மீதான நம்பிக்கை, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக பின்லாந்து மக்கள் ஏனையவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக வருடாந்த மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதேவேளை இஸ்ரேல் 8 ஆவது இடத்தில் உள்ளது. ஹமாஸுடனான மோதலால் இஸ்ரேல் பாதிக்கப்பட்ட போதிலும் 8ஆவது இடத்தில் உள்ளது. மேலும் 147 ஆவது இடத்தில் தற்போது தாலிபான்களின் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் இடம்பிடித்துள்ளது. இதேவேளை இலங்கை 128ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement