• Mar 20 2025

இளைஞர்களை சமூகப் பிறழ்வான செயல்களில் இருந்து கிராம மட்ட அமைப்புக்கள் மீட்க வேண்டும்: வடக்கு ஆளுநர் வலியுறுத்து..!

Sharmi / Mar 20th 2025, 12:57 pm
image

இளையோரை சமூகப் பணிகளிலும், கலைத்துறை, விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர்களின் திசை மாற்றச் செய்யவேண்டும்.சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான இத்தகைய வழிகளை இவ்வாறான கிராமமட்ட மக்கள் அமைப்புக்கள் தான் முன்னெடுக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

அளவெட்டி தெற்கு கலைவாணி ஜனசமூக நிலைய முன்றலில் உருவாக்கப்பட்ட சரஸ்வதி சிலையை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(20) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில், 

தற்போதைய அரசாங்கம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கே கூடுதல் கவனம் செலுத்தியிருக்கின்றது என்றும், அதற்கு அமைவாக இந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருகின்றது எனவும் குறிப்பிட்டார். 

இந்த ஆண்டு சிலவற்றை புனரமைப்பதுடன் எஞ்சியவற்றை அடுத்த ஆண்டுகளில் புனரமைக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

மக்களின் ஆர்வமும், பங்களிப்பும் இருந்தால்தான் அபிவிருத்திகளை விரைவில் நிறைவேற்ற முடியும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இந்தச் சனசமூக நிலையம் நூற்றாண்டுகளை கடந்து சேவையாற்றவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வலி.வடக்கு பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன், பிரதேச கிராம அலுவலர் க.அஜந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 



இளைஞர்களை சமூகப் பிறழ்வான செயல்களில் இருந்து கிராம மட்ட அமைப்புக்கள் மீட்க வேண்டும்: வடக்கு ஆளுநர் வலியுறுத்து. இளையோரை சமூகப் பணிகளிலும், கலைத்துறை, விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர்களின் திசை மாற்றச் செய்யவேண்டும்.சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான இத்தகைய வழிகளை இவ்வாறான கிராமமட்ட மக்கள் அமைப்புக்கள் தான் முன்னெடுக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.அளவெட்டி தெற்கு கலைவாணி ஜனசமூக நிலைய முன்றலில் உருவாக்கப்பட்ட சரஸ்வதி சிலையை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(20) இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில், தற்போதைய அரசாங்கம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கே கூடுதல் கவனம் செலுத்தியிருக்கின்றது என்றும், அதற்கு அமைவாக இந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருகின்றது எனவும் குறிப்பிட்டார். இந்த ஆண்டு சிலவற்றை புனரமைப்பதுடன் எஞ்சியவற்றை அடுத்த ஆண்டுகளில் புனரமைக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மக்களின் ஆர்வமும், பங்களிப்பும் இருந்தால்தான் அபிவிருத்திகளை விரைவில் நிறைவேற்ற முடியும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இந்தச் சனசமூக நிலையம் நூற்றாண்டுகளை கடந்து சேவையாற்றவேண்டும் எனவும் தெரிவித்தார்.இந் நிகழ்வில் வலி.வடக்கு பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன், பிரதேச கிராம அலுவலர் க.அஜந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement