அரசாங்கம் மற்றும் சுங்கத்திணைகளத்தின் தவறான பொறிமுறைகளின் கீழ் இயக்கப்படும் கொள்கலன் பரிசோதனை நிலையங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதாக கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் கொண்ட கொள்கலன்களை சுங்க நடவடிக்கைகளின் பின் விடுவிக்கும் செயற்பாடு அண்மைக்காலமாக மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருகின்றது.
இதற்கான காரணமாக கொள்கலன்களை விடுவிப்பதிலும் பரிசோதனை செய்வதிலும் சுங்கத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பரிசோதனை நிலையங்களின் கொள்ளளவு குறிப்பிடக் கூடிய வகையில் இல்லாமையே இதற்கு காரணமாகும்.
இதனால் பெருமளவான கொள்கலன் பார ஊர்திகள் கொழும்பு பாதைகளில், குறிப்பாக துறைமுக வாயிலிருந்து கொழும்பு ஊறுகொடவத்தை பகுதியில் அமைந்துள்ள ஆர் சி டி எனப்படும் பரிசோதனை நிலையம் வரையான பாதைகளில் அதிகளவில் வரிசையாக நிற்பதனை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதனால் அப்பாதைகளை பயன்படுத்தும் ஏனைய சாரதிகளுக்கும் அப் பாதையின் மருங்கில் வாழும் மக்களுக்கும் பாரிய அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனை தீர்ப்பதாக சுங்கத் திணைக்களம் அறிவித்திருந்தாலும் இந்நிலை தொடர்ந்தும் இருப்பதாக எமது செய்தி சேவைக்கு அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து எமக்கு கருத்து தெரிவித்த பாரவூர்தி சாரதிகள்,
இவ்வாறு நாட்கணக்கில் வரிசையில் நிற்பதால் உடனடியாக வெளியேற்ற வேண்டிய கொள்கலன்கள் நாட்கணக்கில் எமது வாகனத்தில் வைத்திருப்பதனால் தமக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் பெரிதளவு பாதிக்கப்படுவதாக விசனம் தெரிவித்தனர்.
இதற்கு சுங்கத் திணைக்களமும் அரசாங்கமும் விரைவாக ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் இப்பொழுது உள்ள இந்த பரிசோதனை நிலையத்தைப் போன்று மேலும் பரிசோதனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
அவ்வாறு இல்லையேல் தான் வேறு தொழில்களை தேடியோ அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தேடியோ செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சுங்கத் திணைக்களத்தின் தவறான பொறிமுறை: வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் கொள்கலன் கனரக வாகன சாரதிகள். அரசாங்கம் மற்றும் சுங்கத்திணைகளத்தின் தவறான பொறிமுறைகளின் கீழ் இயக்கப்படும் கொள்கலன் பரிசோதனை நிலையங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதாக கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் கொண்ட கொள்கலன்களை சுங்க நடவடிக்கைகளின் பின் விடுவிக்கும் செயற்பாடு அண்மைக்காலமாக மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருகின்றது. இதற்கான காரணமாக கொள்கலன்களை விடுவிப்பதிலும் பரிசோதனை செய்வதிலும் சுங்கத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பரிசோதனை நிலையங்களின் கொள்ளளவு குறிப்பிடக் கூடிய வகையில் இல்லாமையே இதற்கு காரணமாகும். இதனால் பெருமளவான கொள்கலன் பார ஊர்திகள் கொழும்பு பாதைகளில், குறிப்பாக துறைமுக வாயிலிருந்து கொழும்பு ஊறுகொடவத்தை பகுதியில் அமைந்துள்ள ஆர் சி டி எனப்படும் பரிசோதனை நிலையம் வரையான பாதைகளில் அதிகளவில் வரிசையாக நிற்பதனை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால் அப்பாதைகளை பயன்படுத்தும் ஏனைய சாரதிகளுக்கும் அப் பாதையின் மருங்கில் வாழும் மக்களுக்கும் பாரிய அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தீர்ப்பதாக சுங்கத் திணைக்களம் அறிவித்திருந்தாலும் இந்நிலை தொடர்ந்தும் இருப்பதாக எமது செய்தி சேவைக்கு அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து எமக்கு கருத்து தெரிவித்த பாரவூர்தி சாரதிகள், இவ்வாறு நாட்கணக்கில் வரிசையில் நிற்பதால் உடனடியாக வெளியேற்ற வேண்டிய கொள்கலன்கள் நாட்கணக்கில் எமது வாகனத்தில் வைத்திருப்பதனால் தமக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் பெரிதளவு பாதிக்கப்படுவதாக விசனம் தெரிவித்தனர். இதற்கு சுங்கத் திணைக்களமும் அரசாங்கமும் விரைவாக ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் இப்பொழுது உள்ள இந்த பரிசோதனை நிலையத்தைப் போன்று மேலும் பரிசோதனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். அவ்வாறு இல்லையேல் தான் வேறு தொழில்களை தேடியோ அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தேடியோ செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.