• Mar 20 2025

நாட்டில் வாய்ப் புற்றுநோயால் நாளாந்தம் மூவர் உயிரிழப்பு

Chithra / Mar 20th 2025, 12:31 pm
image


வாய்ப் புற்றுநோயால் நாட்டில் நாளாந்தம் மூன்று பேர் உயிரிழப்பதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 புதிய வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அவர்  சுட்டிக்காட்டினார்.

இன்றைய உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முகம் மற்றும் வாய் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது, ​​இலங்கையில் ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய், வாய்ப் புற்றுநோயாகும். 

இலங்கையில் சராசரியாக, வருடத்திற்கு 3,000 புதிய வாய்ப் புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். 

நம் நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று பேர் வாய்ப் புற்றுநோயால் இறக்கின்றனர். 

வாய்ப் புற்றுநோய் எனப்படும் இந்த நிலையை நாம் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். 

புகையிலை மற்றும் புகையிலையை அண்டிய உற்பத்திகளை மெல்லுவதால்  இந்நோய் ஏற்படுகிறது. அத்துடன் பாக்கும் புற்றுநோயிக்கான காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. என்றார்.

நாட்டில் வாய்ப் புற்றுநோயால் நாளாந்தம் மூவர் உயிரிழப்பு வாய்ப் புற்றுநோயால் நாட்டில் நாளாந்தம் மூன்று பேர் உயிரிழப்பதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 புதிய வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அவர்  சுட்டிக்காட்டினார்.இன்றைய உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முகம் மற்றும் வாய் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது, ​​இலங்கையில் ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய், வாய்ப் புற்றுநோயாகும். இலங்கையில் சராசரியாக, வருடத்திற்கு 3,000 புதிய வாய்ப் புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். நம் நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று பேர் வாய்ப் புற்றுநோயால் இறக்கின்றனர். வாய்ப் புற்றுநோய் எனப்படும் இந்த நிலையை நாம் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். புகையிலை மற்றும் புகையிலையை அண்டிய உற்பத்திகளை மெல்லுவதால்  இந்நோய் ஏற்படுகிறது. அத்துடன் பாக்கும் புற்றுநோயிக்கான காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement