• Nov 28 2024

ஹூதி கிளர்ச்சியாளர்களை அடக்க இலங்கை 250 மில்லியன் செலவு செய்வது நகைப்பிற்கு இடமானது - சஜித் பிரேமதாஸ சாடல்..!samugammedia

mathuri / Jan 6th 2024, 9:40 pm
image

ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த எமது நாட்டு கடற்படை கப்பலை செங்கடலுக்கு அனுப்புவது தொடர்பாக ஜனாதிபதி கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதில் வழங்கியுள்ளார்.

செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் நடவடிக்கைகளால் எமது நாட்டிலும் பொருட்களின் விலை அதிகரிக்கும், எனவே நாமும் கடற்படையின் ஒரு பகுதியினரை,250 மில்லியன் ரூபா செலவிட்டு இலங்கை கடற்படைக் கப்பலை ஈடுபடுத்தி,இந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக sea patrolling வேலைத்திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்து இருந்தார்.

 225 மில்லியனை அர்ப்பணித்து எமது கடற்படையை செங்கடலுக்கு அனுப்புவது என்னவொரு நகைப்புக்கிடமான செயலாகும். உலகில் பிரபல நாடுகள் உள்ளன.ஐக்கிய அமெரிக்க குடியரசு,ஐக்கிய இராச்சியம்,NATO அங்கத்துவ நாடுகள்,இவை வங்குரோத்தான நாடுகள் அல்ல.சர்வதேச கடல் சார் பயணப் பாதைகளின் சுதந்திரங்களை பாதுகாக்க இந்நாடுகளால் முடியும்.

எமது இந்த வங்குரோத்து நாடு, மாணவர்களுக்கு மதிய உணவைக் கொடுக்க முடியாது,மாணவர்கள் வகுப்பறைகளில் மயக்கமடைந்து வீழுகின்றனர்,வானளவிற்கு பொருட்களின் விலைகள் சென்றுள்ளன,சிமெந்து மூட்டையின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.நிர்மாணத்துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது.கர்ப்பிணி தாய்மார்கள்,சிறு குழந்தைகள் முதல் அனைவரினதும் வாழ்க்கையும் சீரழிந்துபோயுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கம் செய்கிறது.ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த எமது நாட்டு கடற்படைக்கு எமது நாட்டினது 250 மில்லியன் ரூபாவை செலவழித்து எமது கப்பலை அனுப்புகிறார்கள்.

பொருட்களின் விலையை குறைக்க முடியாத இந்த அரசாங்கம் ஹூதி கிளர்ச்சியாளர்களை அடக்க 250 மில்லியன் செலவிட்டுள்ளது.நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் வேளையில் முன்னுரிமை அளிக்க வேண்டிய பல விடயங்கள் இருந்த போதிலும் ஜனாதிபதி வேறு விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


 


ஹூதி கிளர்ச்சியாளர்களை அடக்க இலங்கை 250 மில்லியன் செலவு செய்வது நகைப்பிற்கு இடமானது - சஜித் பிரேமதாஸ சாடல்.samugammedia ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த எமது நாட்டு கடற்படை கப்பலை செங்கடலுக்கு அனுப்புவது தொடர்பாக ஜனாதிபதி கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதில் வழங்கியுள்ளார்.செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் நடவடிக்கைகளால் எமது நாட்டிலும் பொருட்களின் விலை அதிகரிக்கும், எனவே நாமும் கடற்படையின் ஒரு பகுதியினரை,250 மில்லியன் ரூபா செலவிட்டு இலங்கை கடற்படைக் கப்பலை ஈடுபடுத்தி,இந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக sea patrolling வேலைத்திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்து இருந்தார். 225 மில்லியனை அர்ப்பணித்து எமது கடற்படையை செங்கடலுக்கு அனுப்புவது என்னவொரு நகைப்புக்கிடமான செயலாகும். உலகில் பிரபல நாடுகள் உள்ளன.ஐக்கிய அமெரிக்க குடியரசு,ஐக்கிய இராச்சியம்,NATO அங்கத்துவ நாடுகள்,இவை வங்குரோத்தான நாடுகள் அல்ல.சர்வதேச கடல் சார் பயணப் பாதைகளின் சுதந்திரங்களை பாதுகாக்க இந்நாடுகளால் முடியும்.எமது இந்த வங்குரோத்து நாடு, மாணவர்களுக்கு மதிய உணவைக் கொடுக்க முடியாது,மாணவர்கள் வகுப்பறைகளில் மயக்கமடைந்து வீழுகின்றனர்,வானளவிற்கு பொருட்களின் விலைகள் சென்றுள்ளன,சிமெந்து மூட்டையின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.நிர்மாணத்துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது.கர்ப்பிணி தாய்மார்கள்,சிறு குழந்தைகள் முதல் அனைவரினதும் வாழ்க்கையும் சீரழிந்துபோயுள்ளது.இந்த நிலையில், அரசாங்கம் செய்கிறது.ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த எமது நாட்டு கடற்படைக்கு எமது நாட்டினது 250 மில்லியன் ரூபாவை செலவழித்து எமது கப்பலை அனுப்புகிறார்கள்.பொருட்களின் விலையை குறைக்க முடியாத இந்த அரசாங்கம் ஹூதி கிளர்ச்சியாளர்களை அடக்க 250 மில்லியன் செலவிட்டுள்ளது.நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் வேளையில் முன்னுரிமை அளிக்க வேண்டிய பல விடயங்கள் இருந்த போதிலும் ஜனாதிபதி வேறு விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement