• Sep 08 2024

இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் அழியப்போகும் இலங்கை - விடுக்கப்பட்ட அபாய அறிவிப்பு..!samugammedia

mathuri / Feb 26th 2024, 5:55 am
image

Advertisement

எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடன் 'எட்கா ஒப்பந்தம்' கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த நிலையில், எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர்,  எந்தவொரு இந்தியனும் சுதந்திரமாக வேலைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் இலங்கைக்கு வர முடியும். 

எனவே சில காலத்திற்குப் பிறகு இலங்கை இந்தியர்களால் நிரம்புவதும், இலங்கையர்கள் நாட்டில் சிறுபான்மையினராக மாறுவதும் தவிர்க்க முடியாதது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இலங்கையின் தலைவிதி என்ற தொனிப்பொருளில் கடுவெல கொஸ்வத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அவ்வாறான ஒரு நிலை ஏற்படின் அன்றிலிருந்து இலங்கை இறையாண்மையை இழக்கும் என்றும், நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள இத்தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் இறையாண்மையை பலிகொடுத்து வருவதாகவும்  குறிப்பிட்டார்.

அந்த பாவ நடவடிக்கைக்கு தினேஷ் குணவர்தனவும், ராஜபக்சவும் "விளக்கை" ஏற்றி வருவதாகவும் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் அழியப்போகும் இலங்கை - விடுக்கப்பட்ட அபாய அறிவிப்பு.samugammedia எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடன் 'எட்கா ஒப்பந்தம்' கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த நிலையில், எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர்,  எந்தவொரு இந்தியனும் சுதந்திரமாக வேலைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் இலங்கைக்கு வர முடியும். எனவே சில காலத்திற்குப் பிறகு இலங்கை இந்தியர்களால் நிரம்புவதும், இலங்கையர்கள் நாட்டில் சிறுபான்மையினராக மாறுவதும் தவிர்க்க முடியாதது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.இலங்கையின் தலைவிதி என்ற தொனிப்பொருளில் கடுவெல கொஸ்வத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த அவர், அவ்வாறான ஒரு நிலை ஏற்படின் அன்றிலிருந்து இலங்கை இறையாண்மையை இழக்கும் என்றும், நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள இத்தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் இறையாண்மையை பலிகொடுத்து வருவதாகவும்  குறிப்பிட்டார்.அந்த பாவ நடவடிக்கைக்கு தினேஷ் குணவர்தனவும், ராஜபக்சவும் "விளக்கை" ஏற்றி வருவதாகவும் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement