• May 10 2024

செங்கடலுக்கு மற்றுமொரு கப்பலை அனுப்புகின்றது இலங்கை..! - கடற்படை அதிகாரி தகவல்

Chithra / Mar 3rd 2024, 12:02 pm
image

Advertisement

 

சர்வதேச கடற்பரப்பில் கடல்சார் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைக்கு இலங்கை தனது இரண்டாவது கப்பலை அனுப்பவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முதலாவது கப்பல் தனது நடவடிக்கையினை பூர்த்திசெய்த பின்னர் இரண்டு நாட்களிற்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளது என கடற்படையின் ஊடக இயக்குநர்  கப்டன்  தயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை எஸ்.எம்.எஸ் கஜபா என்ற கப்பலை 100 கடற்படையினருடன் அனுப்பியது.

சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இலங்கை இந்த கப்பலை அனுப்பியது.

இணைந்த கடல்சார் படையணியுடன் சேர்ந்து செயற்பட்டு இந்து சமுத்திரத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதும் நோக்கமாகயிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடற்படை நடவடிக்கைக்கு இரண்டாவது கப்பலை அனுப்புவதற்கு இலங்கை தயாராகி வருகின்றது எனவும், மேலதிக தகவல்களை வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


செங்கடலுக்கு மற்றுமொரு கப்பலை அனுப்புகின்றது இலங்கை. - கடற்படை அதிகாரி தகவல்  சர்வதேச கடற்பரப்பில் கடல்சார் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைக்கு இலங்கை தனது இரண்டாவது கப்பலை அனுப்பவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.முதலாவது கப்பல் தனது நடவடிக்கையினை பூர்த்திசெய்த பின்னர் இரண்டு நாட்களிற்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளது என கடற்படையின் ஊடக இயக்குநர்  கப்டன்  தயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.இலங்கை எஸ்.எம்.எஸ் கஜபா என்ற கப்பலை 100 கடற்படையினருடன் அனுப்பியது.சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இலங்கை இந்த கப்பலை அனுப்பியது.இணைந்த கடல்சார் படையணியுடன் சேர்ந்து செயற்பட்டு இந்து சமுத்திரத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதும் நோக்கமாகயிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.சர்வதேச கடற்படை நடவடிக்கைக்கு இரண்டாவது கப்பலை அனுப்புவதற்கு இலங்கை தயாராகி வருகின்றது எனவும், மேலதிக தகவல்களை வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement