• May 13 2024

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 118 கோடி - இளைஞர், பெண்கள் வாழ்வில் ஏற்படவுள்ள மாற்றம் samugammedia

Chithra / Apr 25th 2023, 10:33 am
image

Advertisement

இலங்கையின் உள்நாட்டு விவசாயம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டமும் ஜப்பானும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. 

இதன் ஊடாக 58 ஆயிரம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் நேரடி பயனை பெறவுள்ளனர்.

அத்துடன் வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புக்குள்ளான சமூகத்தினர் மறைமுகமாகப் பயனடையவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய சிறிய விவசாயக் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக 118 கோடி ரூபாவையும் வழங்கவுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் செயற்படுத்தப்படும் இந்த புதிய வாழ்வாதார திட்டம் நேற்று அலரி மாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 118 கோடி - இளைஞர், பெண்கள் வாழ்வில் ஏற்படவுள்ள மாற்றம் samugammedia இலங்கையின் உள்நாட்டு விவசாயம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டமும் ஜப்பானும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இதன் ஊடாக 58 ஆயிரம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் நேரடி பயனை பெறவுள்ளனர்.அத்துடன் வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புக்குள்ளான சமூகத்தினர் மறைமுகமாகப் பயனடையவுள்ளனர்.ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய சிறிய விவசாயக் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக 118 கோடி ரூபாவையும் வழங்கவுள்ளது.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் செயற்படுத்தப்படும் இந்த புதிய வாழ்வாதார திட்டம் நேற்று அலரி மாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 

Advertisement

Advertisement

Advertisement