இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்றையதினம்(15) இடம்பெற்ற இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் பதும் நிஸங்க 54 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரொமாரியோ ஷெப்பர்ட் 3 ஓவர்களில் 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து, 163 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 16.1 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய துனித் வெல்லாலகே 4 ஓவர்களில் 9 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக பதும் நிஸங்க தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றி. இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்றையதினம்(15) இடம்பெற்ற இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.குறித்த போட்டி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இலங்கை அணி சார்பில் பதும் நிஸங்க 54 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரொமாரியோ ஷெப்பர்ட் 3 ஓவர்களில் 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.தொடர்ந்து, 163 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 16.1 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய துனித் வெல்லாலகே 4 ஓவர்களில் 9 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.போட்டியின் ஆட்டநாயகனாக பதும் நிஸங்க தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.