• Nov 15 2025

இஸ்ரேலில் இலங்கையர் கொடூரமாக கொலை; 2 மாதங்களுக்கு முன் வேலைக்கு சென்றவருக்கு நடந்த பயங்கரம்

Chithra / Nov 14th 2025, 10:47 am
image

 

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காலியைச் சேர்ந்த 38 வயது இலங்கையரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

2 மாதங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை வேலைக்காக அவர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். 

இஸ்ரேலில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் அவர் கொல்லப்பட்டதாக இலங்கைக்கான இஸ்ரேலிய தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கையரின் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கொலை செய்யப்பட்ட நபர் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பணி விசா மூலம் இஸ்ரேல் சென்றவர் என தெரியவந்துள்ளது.  

இஸ்ரேலிய பொலிஸாரின் இன்டர்போல் பிரிவு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றது.


இஸ்ரேலில் இலங்கையர் கொடூரமாக கொலை; 2 மாதங்களுக்கு முன் வேலைக்கு சென்றவருக்கு நடந்த பயங்கரம்  இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு இந்த கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.காலியைச் சேர்ந்த 38 வயது இலங்கையரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.2 மாதங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை வேலைக்காக அவர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இஸ்ரேலில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் அவர் கொல்லப்பட்டதாக இலங்கைக்கான இஸ்ரேலிய தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.குறித்த இலங்கையரின் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் கொலை செய்யப்பட்ட நபர் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பணி விசா மூலம் இஸ்ரேல் சென்றவர் என தெரியவந்துள்ளது.  இஸ்ரேலிய பொலிஸாரின் இன்டர்போல் பிரிவு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement