• Nov 22 2024

இந்தியாவில் கரையொதுங்கிய இலங்கை மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்- அன்னராசா கோரிக்கை..!

Sharmi / Aug 10th 2024, 9:09 am
image

இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரியதுங்கிய இலங்கை மீனவர்கள், இரண்டு மாதங்கள் கடந்தும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் அவர்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடத்தில் கோரிக்கை முன்வைப்பதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தினுடைய வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024.06.10 அன்று யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் இருந்து  கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள், கடல் சீற்றம் காரணமாக வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் கடலில் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போன மீனவர்கள் கடலில் தத்தளித்தவேளை, பன்னிரண்டாம் திகதி இந்தியாவின் நாகப்பட்டினம் - ஆற்காட்டுதுறை மீனவர்களினால் சேர்ப்பிக்கப்பட்டு இந்திய கரையோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இன்று ஏழாம் மாதம் ஒன்பதாம் திகதி. இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் கூட அந்த மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படவில்லை. இது வடக்குக் கடல் தொழிலாளர்கள் ஆகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

அண்மைக்காலமாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் அவர்கள் தற்போது இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினையிலேயே கூடிய கரிசனை காட்டி வருகின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனாலும் மைக்கல் பெர்னாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இரண்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்கவோ, அல்லது சட்ட விரோதமாக உள்நுழையவோ இல்லை. அவர்கள் கடல் சீரற்ற காலநிலை காரணமாக வெளியணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த இரண்டு மீனவர்களும் நல்லெண்ண அடிப்படையில் அவர்களது படகுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக மீனவர்கள், மத்திய அரசு, மு.க.ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் ஆகியோரிடம் வடக்கு கிழக்கு மீனவர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கின்றோம். இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்த்து அவர்களை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும்.

அவர்களுடைய குடும்பங்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும், கஷ்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை கருத்தில் எடுத்து, இலங்கை - இந்திய மீனவர்களின் நல்லெண்ண அடிப்படையிலான செயற்பாட்டுக்கு இந்த விடுதலையை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம் என்றார்.

இந்தியாவில் கரையொதுங்கிய இலங்கை மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்- அன்னராசா கோரிக்கை. இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரியதுங்கிய இலங்கை மீனவர்கள், இரண்டு மாதங்கள் கடந்தும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் அவர்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடத்தில் கோரிக்கை முன்வைப்பதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தினுடைய வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.நேற்றையதினம்(09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,2024.06.10 அன்று யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் இருந்து  கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள், கடல் சீற்றம் காரணமாக வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் கடலில் காணாமல் போயிருந்தனர்.காணாமல் போன மீனவர்கள் கடலில் தத்தளித்தவேளை, பன்னிரண்டாம் திகதி இந்தியாவின் நாகப்பட்டினம் - ஆற்காட்டுதுறை மீனவர்களினால் சேர்ப்பிக்கப்பட்டு இந்திய கரையோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று ஏழாம் மாதம் ஒன்பதாம் திகதி. இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் கூட அந்த மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படவில்லை. இது வடக்குக் கடல் தொழிலாளர்கள் ஆகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது.அண்மைக்காலமாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் அவர்கள் தற்போது இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினையிலேயே கூடிய கரிசனை காட்டி வருகின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனாலும் மைக்கல் பெர்னாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இரண்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்கவோ, அல்லது சட்ட விரோதமாக உள்நுழையவோ இல்லை. அவர்கள் கடல் சீரற்ற காலநிலை காரணமாக வெளியணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த இரண்டு மீனவர்களும் நல்லெண்ண அடிப்படையில் அவர்களது படகுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக மீனவர்கள், மத்திய அரசு, மு.க.ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் ஆகியோரிடம் வடக்கு கிழக்கு மீனவர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கின்றோம். இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்த்து அவர்களை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும்.அவர்களுடைய குடும்பங்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும், கஷ்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை கருத்தில் எடுத்து, இலங்கை - இந்திய மீனவர்களின் நல்லெண்ண அடிப்படையிலான செயற்பாட்டுக்கு இந்த விடுதலையை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement