இந்திய – இலங்கை கடற்படையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக அரேபிய கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகளிலிருந்து சுமார் 500 கிலோ கிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கையானது இன்று வெள்ளிக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கொடியேற்றப்பட்ட மீன்பிடிக் கப்பல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படைக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம், பணியாளர்களுடன் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய கடற்படை கூறியுள்ளது.
இலங்கைக் கொடியுடன் போதைப்பொருள் கொண்டு சென்ற கப்பல்கள் பறிமுதல் இந்திய – இலங்கை கடற்படையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக அரேபிய கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகளிலிருந்து சுமார் 500 கிலோ கிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.இந்த மீட்பு நடவடிக்கையானது இன்று வெள்ளிக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது.இலங்கையின் கொடியேற்றப்பட்ட மீன்பிடிக் கப்பல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படைக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம், பணியாளர்களுடன் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய கடற்படை கூறியுள்ளது.