• Nov 25 2024

இயற்கை துறைமுகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை இலங்கை அரசு செய்கிறது - மஹ்ரூப் எம்பி கண்டனம்..!smugammedia

Tharun / Dec 9th 2023, 11:59 am
image

நாட்டில் உள்ள ஒரே ஒரு இயற்கை துறைமுகமான திருகோணமலையை அபிவிருத்தி என்ற போர்வையில் இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த அவர்,

இலங்கை நாட்டுக்கு இயற்கையாக கிடைத்தது தான் இயற்கை துறைமுகமான திருகோணமலை. பல நாடுகளின் பார்வை திருகோணமலை துறைமுகத்தில் காணப்படுகிறது. ஆனால் நமது நாட்டின் பார்வையானது  திருகோணமலை துறைமுகத்திலே  இல்லாதது வேதனை  அளிக்கிறது. கடந்த காலங்களில் இத்துறைமுகத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்திருக்கிறோம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இத்துறைமுகம் தென் பகுதியில் அமைந்திருந்தால் இதன் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். 

இருக்கும் துறைமுகத்தை பயன்படுத்தி வருமானத்தை அதிகரிப்பதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றை உருவாக்கி கப்பல் வராத துறைமுகத்தை வெளிநாடுகளில் இருந்து பில்லியன் கணக்கில் கடன் வாங்கி இருப்பது வீணான செயலாகும். நம் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிகொள்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும் எனவும் ,

மேலும், திருகோணமலை துறைமுகம் கட்டாயம் அபிவிருத்தி செய்ய வேண்டிய ஒன்றாகும். இது இலங்கையின் ஆரம்ப காலங்களில் எல்லா தேவையும் பூர்த்தி செய்ய உதவியாக இருந்தது. எம் நாட்டை கைப்பற்றியவர்கள் எல்லோரும் இதனை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனை அபிவிருத்தி செய்தால் வடக்கு கிழக்கில் கைத்தொழில் வளர்ச்சியடையும். எனவே இதற்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அத்துடன் திருகோணமலை முத்துநகர் பகுதி மக்களின் பிரச்சினைகளை  தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்

இயற்கை துறைமுகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை இலங்கை அரசு செய்கிறது - மஹ்ரூப் எம்பி கண்டனம்.smugammedia நாட்டில் உள்ள ஒரே ஒரு இயற்கை துறைமுகமான திருகோணமலையை அபிவிருத்தி என்ற போர்வையில் இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த அவர்,இலங்கை நாட்டுக்கு இயற்கையாக கிடைத்தது தான் இயற்கை துறைமுகமான திருகோணமலை. பல நாடுகளின் பார்வை திருகோணமலை துறைமுகத்தில் காணப்படுகிறது. ஆனால் நமது நாட்டின் பார்வையானது  திருகோணமலை துறைமுகத்திலே  இல்லாதது வேதனை  அளிக்கிறது. கடந்த காலங்களில் இத்துறைமுகத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்திருக்கிறோம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இத்துறைமுகம் தென் பகுதியில் அமைந்திருந்தால் இதன் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இருக்கும் துறைமுகத்தை பயன்படுத்தி வருமானத்தை அதிகரிப்பதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றை உருவாக்கி கப்பல் வராத துறைமுகத்தை வெளிநாடுகளில் இருந்து பில்லியன் கணக்கில் கடன் வாங்கி இருப்பது வீணான செயலாகும். நம் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிகொள்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும் எனவும் ,மேலும், திருகோணமலை துறைமுகம் கட்டாயம் அபிவிருத்தி செய்ய வேண்டிய ஒன்றாகும். இது இலங்கையின் ஆரம்ப காலங்களில் எல்லா தேவையும் பூர்த்தி செய்ய உதவியாக இருந்தது. எம் நாட்டை கைப்பற்றியவர்கள் எல்லோரும் இதனை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனை அபிவிருத்தி செய்தால் வடக்கு கிழக்கில் கைத்தொழில் வளர்ச்சியடையும். எனவே இதற்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அத்துடன் திருகோணமலை முத்துநகர் பகுதி மக்களின் பிரச்சினைகளை  தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement