• Nov 13 2025

இலங்கையில் கொலைகளை செய்பவர்கள் டுபாயில் தஞ்சம் - தலைமறைவாகியுள்ள 15 பேர்

Chithra / Nov 12th 2025, 7:36 pm
image


கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக இன்டர்போலால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நாட்டின் பாதுகாப்புப் படையினர் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஏற்கனவே இன்டர்போலுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சிவப்பு அறிவிப்புகளைப் பெறுபவர்களை நாட்டின் பாதுகாப்புப் படையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஒக்டோபரில் மாதம் பாதாள உலகில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கராவை விரைவாக நாடு கடத்த டுபாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் லலித் கன்னங்கரா டுபாய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், வழக்கு முடியும் வரை இலங்கைக்கு அழைத்து வர முடியாது என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வழக்கு முடிவடைய குறைந்தது 04 மாதங்கள் வரை செல்லலாம். சந்தேக நபர் சார்பாக இலங்கையில் இருந்து வழக்கறிஞர் ஒருவர் டுபாய் சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.


இலங்கையில் கொலைகளை செய்பவர்கள் டுபாயில் தஞ்சம் - தலைமறைவாகியுள்ள 15 பேர் கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக இன்டர்போலால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.நாட்டின் பாதுகாப்புப் படையினர் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஏற்கனவே இன்டர்போலுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.சிவப்பு அறிவிப்புகளைப் பெறுபவர்களை நாட்டின் பாதுகாப்புப் படையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.கடந்த ஒக்டோபரில் மாதம் பாதாள உலகில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கராவை விரைவாக நாடு கடத்த டுபாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.எனினும் லலித் கன்னங்கரா டுபாய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், வழக்கு முடியும் வரை இலங்கைக்கு அழைத்து வர முடியாது என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.வழக்கு முடிவடைய குறைந்தது 04 மாதங்கள் வரை செல்லலாம். சந்தேக நபர் சார்பாக இலங்கையில் இருந்து வழக்கறிஞர் ஒருவர் டுபாய் சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement