• Nov 17 2024

தொழில் ஆசை காட்டி போருக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு நிறுவனம்: விமான நிலையத்திலிருந்து தப்பியோடிய இலங்கையர்கள்..!

Chithra / Mar 4th 2024, 10:41 am
image

 

கொழும்பு, நுகேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தினால் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவிருந்த 17 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் வெளிநாடு செல்லும் நோக்கில் நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.

ரஷ்ய இராணுவத்திற்கும், சிவில் வேலைகளுக்காகவும் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவிருந்த 17 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இவ்வாறு தப்பியோடியவர்கள் கம்பஹா, கண்டி, கம்பளை, ருவன்வெல்ல, காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்களில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளிகள் மற்றும் இலங்கையில் இராணுவ சேவையிலிருந்து விலகியவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அச்சமடைந்த அவர்கள்,  ரஷ்ய பயணத்தின் அனுபவத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த பயணத்திற்காக சுமார் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்ததாகவும், அந்த பணத்தை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து திரும்பப்பெற உள்ளதாகவும், 

பணத்தைத் திரும்பப்பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் விமான நிலையத்தை விட்டு விரைவாக வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொழில் ஆசை காட்டி போருக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு நிறுவனம்: விமான நிலையத்திலிருந்து தப்பியோடிய இலங்கையர்கள்.  கொழும்பு, நுகேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தினால் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவிருந்த 17 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் வெளிநாடு செல்லும் நோக்கில் நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.ரஷ்ய இராணுவத்திற்கும், சிவில் வேலைகளுக்காகவும் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவிருந்த 17 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.இவ்வாறு தப்பியோடியவர்கள் கம்பஹா, கண்டி, கம்பளை, ருவன்வெல்ல, காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.இவர்களில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளிகள் மற்றும் இலங்கையில் இராணுவ சேவையிலிருந்து விலகியவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.இந்த சம்பவத்தால் அச்சமடைந்த அவர்கள்,  ரஷ்ய பயணத்தின் அனுபவத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.இந்த பயணத்திற்காக சுமார் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்ததாகவும், அந்த பணத்தை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து திரும்பப்பெற உள்ளதாகவும், பணத்தைத் திரும்பப்பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் விமான நிலையத்தை விட்டு விரைவாக வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement