• Mar 20 2025

இந்திய மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்: இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்..!

Sharmi / Mar 19th 2025, 11:24 am
image

இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றையதினம்(19) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

மேலும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. மீனவர்களுக்கு பல லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதனை கண்டித்து, தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 3 பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்தனர்.

இதில், படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதனை கண்டித்து, இன்று ஒரு நாள் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.

இதனால்,துறைமுகத்தில் 560 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். 

இலங்கை கடற்படையினரில் தொடர் கைது காரணமாக ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முழுமையாக முடங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பல ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கான ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்திய மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்: இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம். இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்றையதினம்(19) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.மேலும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. மீனவர்களுக்கு பல லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதனை கண்டித்து, தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், இராமேசுவரம் மீனவர்கள் 3 பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்தனர்.இதில், படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து, இன்று ஒரு நாள் இராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.இதனால்,துறைமுகத்தில் 560 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். இலங்கை கடற்படையினரில் தொடர் கைது காரணமாக ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முழுமையாக முடங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கான ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement