சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட லோரென்சோ புதா 4 நெடுநாள் படகை விடுவிப்பதற்காக பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் ஆதரவை இலங்கை கடற்படை கோரியுள்ளது.
சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கை மீனவர்கள் 6 பேரை ஏற்றிச்சென்ற நீண்ட நாள் மீன்பிடி படகொன்றே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடத்தப்பட்டுள்ள குறித்த படகு, அண்மையில் திக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.
கடத்தப்பட்ட படகை மீட்க இலங்கை கடற்படை தீவிர முயற்சி. சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட லோரென்சோ புதா 4 நெடுநாள் படகை விடுவிப்பதற்காக பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் ஆதரவை இலங்கை கடற்படை கோரியுள்ளது.சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதில் இலங்கை மீனவர்கள் 6 பேரை ஏற்றிச்சென்ற நீண்ட நாள் மீன்பிடி படகொன்றே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கடத்தப்பட்டுள்ள குறித்த படகு, அண்மையில் திக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.