• Nov 23 2024

இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி இந்திய மீனவர்களின் விசைப் படகு மூழ்கியது: நான்கு மீனவர்கள் மாயம்...!

Sharmi / Aug 1st 2024, 8:32 am
image

ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகு  மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் மீன்பிடி விசைப் படகு நடுக்கடலில் மூழ்கியது.

இதனையடுத்து குறித்த படகில் இருந்த நான்கு மீனவர்கள் மாயமானதால் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றையதினம்(31) 397 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்று நேற்று நள்ளிரவு  விசைப்படகுகள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படை ரோந்து படகுகள், இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததால் கைது செய்யப்படும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.

இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.

அப்போது இலங்கை இந்திய சர்வதேச கடல்  எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் என்பவரின் விசைப் படகு மீது  இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி மீன்பிடி படகு நடுக்கடலில் மீனவர்களுடன் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் படகில் இருந்த  மூக்கையா, முனியசாமி, ராமச்சந்திரன்,; முத்து முனியாண்டி ஆகிய நான்கு மீனவர்கள் மாயமாகினர்.

மேலும் நான்கு மீனவர்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் அச்சமடைந்த படகின் உரிமையாளர் கார்த்திகேயன் மாயமான மீனவர்களையும் படகையும் கண்டுபிடித்து தருமாறு ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீன் பிடி விசைப் படகு மீது  இலங்கை கடற்படை ரோந்து படகு  மோதியதில்  நான்கு மீனவர்கள் மாயமான நிகழ்வு ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி இந்திய மீனவர்களின் விசைப் படகு மூழ்கியது: நான்கு மீனவர்கள் மாயம். ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகு  மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் மீன்பிடி விசைப் படகு நடுக்கடலில் மூழ்கியது.இதனையடுத்து குறித்த படகில் இருந்த நான்கு மீனவர்கள் மாயமானதால் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றையதினம்(31) 397 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்று நேற்று நள்ளிரவு  விசைப்படகுகள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படை ரோந்து படகுகள், இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததால் கைது செய்யப்படும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். அப்போது இலங்கை இந்திய சர்வதேச கடல்  எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் என்பவரின் விசைப் படகு மீது  இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி மீன்பிடி படகு நடுக்கடலில் மீனவர்களுடன் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் படகில் இருந்த  மூக்கையா, முனியசாமி, ராமச்சந்திரன்,; முத்து முனியாண்டி ஆகிய நான்கு மீனவர்கள் மாயமாகினர். மேலும் நான்கு மீனவர்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் அச்சமடைந்த படகின் உரிமையாளர் கார்த்திகேயன் மாயமான மீனவர்களையும் படகையும் கண்டுபிடித்து தருமாறு ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீன் பிடி விசைப் படகு மீது  இலங்கை கடற்படை ரோந்து படகு  மோதியதில்  நான்கு மீனவர்கள் மாயமான நிகழ்வு ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement