நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளிக்கும் ஜனாதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் அதனை மறந்து விடுவதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய தினம் மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தான் மாநாயக்க தேரராக பதவி ஏற்றுக்கொண்ட கடந்த இருபது ஆண்டுகளாகவே இந்த நிலைமை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக தம்மிடம் வாக்குறுதி அளித்த ஜனாதிபதிகள் எவரும் பதவி ஏற்றதன் பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் இந்த விடயம் பற்றி பேசப்பட்டு தேர்தலின் பின்னர் வழமை போன்று அந்த விடயம் இருட்டடிப்புச் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவி ஏற்றதும் வாக்குறுதிகளை மறந்து விடும் இலங்கை ஜனாதிபதிகள். மல்வத்து பீடாதிபதி பகிரங்க குற்றச்சாட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளிக்கும் ஜனாதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் அதனை மறந்து விடுவதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார்.முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய தினம் மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தான் மாநாயக்க தேரராக பதவி ஏற்றுக்கொண்ட கடந்த இருபது ஆண்டுகளாகவே இந்த நிலைமை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக தம்மிடம் வாக்குறுதி அளித்த ஜனாதிபதிகள் எவரும் பதவி ஏற்றதன் பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் இந்த விடயம் பற்றி பேசப்பட்டு தேர்தலின் பின்னர் வழமை போன்று அந்த விடயம் இருட்டடிப்புச் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.