• Nov 22 2024

போராட்டம் காரணமாக கலவர பூமியான பங்களாதேஷ் - சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள்

Tharun / Jul 20th 2024, 5:35 pm
image

பங்களாதேஷில் நடைபெறும் மாணவர்களது போராட்டம் காரணமாக அந்நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் இலங்கை(Sri lanka) மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு(Ministry of Foreign Affairs) நடவடிக்கை எடுத்துள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பங்களாதேஷில் 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் பயின்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும்  பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர், மாணவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நேரில் பார்வையிட்டதுடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பங்களாதேஷ் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் போராட்டத்தில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் போராட்டக்காரர்களின் மரணத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina) உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

போராட்டம் காரணமாக கலவர பூமியான பங்களாதேஷ் - சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் பங்களாதேஷில் நடைபெறும் மாணவர்களது போராட்டம் காரணமாக அந்நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் இலங்கை(Sri lanka) மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு(Ministry of Foreign Affairs) நடவடிக்கை எடுத்துள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் பயின்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும்  பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர், மாணவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நேரில் பார்வையிட்டதுடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.இதேவேளை பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.இதேவேளை, பங்களாதேஷ் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் போராட்டத்தில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்துடன் போராட்டக்காரர்களின் மரணத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina) உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement