• Nov 25 2024

அவுஸ்திரேலிய கால்பந்து அணியில் அறிமுகமான இலங்கைத் தமிழன்..!

Sharmi / Oct 14th 2024, 12:00 pm
image

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிஃபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி மெக்சிகோவில் உள்ள அஸ்டெகா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், பிஃபா உலகக்கோப்பை 2026க்கான தகுதிகான் சுற்றில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அவுஸ்திரேலிய வாழ் தமிழ் கால்பந்து வீரரான 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, அவுஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற, சீனாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றியில் 3-1 என்ற கோல் கணக்கில் முக்கியமான கோல் அடித்து, நிஷான் வேலுப்பிள்ளை அவுஸ்திரேலிய நாட்டின் உலகக் கோப்பை நம்பிக்கையை உயிர்ப்பித்தார்.

இவர் கடந்த 2019 முதல் அவுஸ்திரேலியாவில் எடிலெய்ட் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.

பிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து பின்னடைவை வந்த நிலையில், அணியின் மேலாளராக புதிதாக பொறுப்பேற்ற டோனி போபாவிக் வியாழக்கிழமை நடைபெற்ற சீனாவுக்கு எதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை அணிக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

அவுஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83ஆவது நிமிடத்தில் களம் நுழைந்த நிஷான் அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.

இந்நிலையில், அவர் அவுஸ்திரேலிய அணிக்காக நிஷான் வேலுப்பிள்ளை கோல் அடித்த காணொளியும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, நிஷான் வேலுப்பிள்ளையின் கோல் மூலம் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கால்பந்து அணி, ஃபிஃபா உலகக்கோப்பை தகுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.  

இந்நிலையில், அவுஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்த நிஷான் வேலுப்பிள்ளைக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


அவுஸ்திரேலிய கால்பந்து அணியில் அறிமுகமான இலங்கைத் தமிழன். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிஃபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி மெக்சிகோவில் உள்ள அஸ்டெகா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில், பிஃபா உலகக்கோப்பை 2026க்கான தகுதிகான் சுற்றில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அவுஸ்திரேலிய வாழ் தமிழ் கால்பந்து வீரரான 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, அவுஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற, சீனாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றியில் 3-1 என்ற கோல் கணக்கில் முக்கியமான கோல் அடித்து, நிஷான் வேலுப்பிள்ளை அவுஸ்திரேலிய நாட்டின் உலகக் கோப்பை நம்பிக்கையை உயிர்ப்பித்தார்.இவர் கடந்த 2019 முதல் அவுஸ்திரேலியாவில் எடிலெய்ட் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.பிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து பின்னடைவை வந்த நிலையில், அணியின் மேலாளராக புதிதாக பொறுப்பேற்ற டோனி போபாவிக் வியாழக்கிழமை நடைபெற்ற சீனாவுக்கு எதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை அணிக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டார்.அவுஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83ஆவது நிமிடத்தில் களம் நுழைந்த நிஷான் அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.இந்நிலையில், அவர் அவுஸ்திரேலிய அணிக்காக நிஷான் வேலுப்பிள்ளை கோல் அடித்த காணொளியும் வெளியாகியுள்ளது.இதற்கிடையே, நிஷான் வேலுப்பிள்ளையின் கோல் மூலம் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கால்பந்து அணி, ஃபிஃபா உலகக்கோப்பை தகுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.  இந்நிலையில், அவுஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்த நிஷான் வேலுப்பிள்ளைக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement