• May 09 2024

நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர்..! samugammedia

Chithra / Oct 12th 2023, 12:39 pm
image

Advertisement

 

நியூசிலாந்து தேர்தலில் தேசியக் கட்சி தேர்தல் வேட்பாளர்  பட்டியலில் ஒரு இலங்கைத் தமிழர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்தில் எதிர்வரும்   சனிக்கிழமை ( 14.10.23 ) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் முன்னாள் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. 

இரு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆயினும் சிறு கட்சிகள் துணை கொண்டு தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகம் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

இந்தத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளாநந்தம் இடம்பெற்றுள்ளார். 

அவர் இங்கிலாந்து சிங்கப்பூர் அவுஸ்திரேலியா, மற்றும் நியுசிலாந்தில் பெரும் கட்டுமாணப் திட்டங்களில் அலோசகராக பணியாற்றி உள்ளார். 

இவர் யாழ் புனித ஜோன் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர். samugammedia  நியூசிலாந்து தேர்தலில் தேசியக் கட்சி தேர்தல் வேட்பாளர்  பட்டியலில் ஒரு இலங்கைத் தமிழர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நியுசிலாந்தில் எதிர்வரும்   சனிக்கிழமை ( 14.10.23 ) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்தலில் முன்னாள் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆயினும் சிறு கட்சிகள் துணை கொண்டு தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகம் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.இந்தத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளாநந்தம் இடம்பெற்றுள்ளார். அவர் இங்கிலாந்து சிங்கப்பூர் அவுஸ்திரேலியா, மற்றும் நியுசிலாந்தில் பெரும் கட்டுமாணப் திட்டங்களில் அலோசகராக பணியாற்றி உள்ளார். இவர் யாழ் புனித ஜோன் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement