• Apr 02 2025

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தொழிலாளர்கள் லெபனானிலிருந்து வெளியேற்றம்!

Chithra / Dec 5th 2024, 1:26 pm
image


மத்திய கிழக்கில் லெபனான் - இஸ்ரேல் யுத்தம் காரணமாக லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள்,    கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று வந்தடைந்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் 05 சிறு பிள்ளைகள், 03 பெண்கள் மற்றும் 19 ஆண்கள் அடங்குவர்.

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, லெபனானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதன்படி கடந்த தினங்களில் லெபனானில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த 27 இலங்கையர்களும் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-648 இல் துபாயிலிருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தொழிலாளர்கள் லெபனானிலிருந்து வெளியேற்றம் மத்திய கிழக்கில் லெபனான் - இஸ்ரேல் யுத்தம் காரணமாக லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள்,    கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று வந்தடைந்திருந்தனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் 05 சிறு பிள்ளைகள், 03 பெண்கள் மற்றும் 19 ஆண்கள் அடங்குவர்.புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, லெபனானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தனர்.அதன்படி கடந்த தினங்களில் லெபனானில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.இந்த 27 இலங்கையர்களும் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-648 இல் துபாயிலிருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement