• Nov 26 2024

Anaath / Aug 4th 2024, 1:00 pm
image

குவைத்தில் இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் கடந்த  2 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினால் குறித்த குழுவினர் நேற்று (03) இரவு விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ‘எதேர அபி’ என்ற அமைப்பினால் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திரச்சாப்பா லியனகே, சமனலி பொன்சேகா, ஜோலி சியா, உபேகா நிர்மானி உள்ளிட்ட 26 பேர் குவைத் பொலிஸாரால் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இசை நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறாததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் , பாடகர்களைத் தவிர, இசை நிகழ்ச்சிக்கு வந்த இசைக்குழுவினர் மற்றும் அதனை ஏற்பாடு செய்தவர்கள் என பலரை போலீசார் கைது செய்துள்ளதுடன் இசைக்கருவிகளை கைப்பற்றப்பட்டுள்ளன. 

எனினும்  குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீட்டின் பேரில், இவர்களில் 24 பேர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டதாகவும், ஏற்பாட்டுக் குழுவில் இருவர் இன்னும் பொலிஸ் காவலில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத்தில் கைதான இலங்கையர்கள் விடுதலை குவைத்தில் இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் கடந்த  2 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினால் குறித்த குழுவினர் நேற்று (03) இரவு விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ‘எதேர அபி’ என்ற அமைப்பினால் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திரச்சாப்பா லியனகே, சமனலி பொன்சேகா, ஜோலி சியா, உபேகா நிர்மானி உள்ளிட்ட 26 பேர் குவைத் பொலிஸாரால் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.இசை நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறாததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அதனடிப்படையில் , பாடகர்களைத் தவிர, இசை நிகழ்ச்சிக்கு வந்த இசைக்குழுவினர் மற்றும் அதனை ஏற்பாடு செய்தவர்கள் என பலரை போலீசார் கைது செய்துள்ளதுடன் இசைக்கருவிகளை கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும்  குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீட்டின் பேரில், இவர்களில் 24 பேர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டதாகவும், ஏற்பாட்டுக் குழுவில் இருவர் இன்னும் பொலிஸ் காவலில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement