• Apr 13 2025

செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

Tharmini / Jan 28th 2025, 9:43 am
image

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர்.

அதன்படி நாளை (29) இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆவது குழுவைச் சேர்ந்த 29 பெண்கள் 5 ஆண்கள் என 34 செவிலியர் நிபுணர்களுக்கான விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேலிய செவிலியர் நிறுவனம் இரண்டுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதுவரையில் இலங்கையைச் சேர்ந்த 2009 செவிலியர்கள் இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர்.

இதன்படி பார்க்கையில் இஸ்ரேல் செவிலியர் துறையில் இலங்கையர்களுக்கு தொழில் கிடைத்துள்ளது.

எனவே, இஸ்ரேல் செவிலியர் துறையில் தொழில் பெறுவதற்காக யாருக்கும் பணம் கொடுத்து ஏமாறுவதை தவிர்க்குமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நாளை (29) இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆவது குழுவைச் சேர்ந்த 29 பெண்கள் 5 ஆண்கள் என 34 செவிலியர் நிபுணர்களுக்கான விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேலிய செவிலியர் நிறுவனம் இரண்டுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதுவரையில் இலங்கையைச் சேர்ந்த 2009 செவிலியர்கள் இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர்.இதன்படி பார்க்கையில் இஸ்ரேல் செவிலியர் துறையில் இலங்கையர்களுக்கு தொழில் கிடைத்துள்ளது.எனவே, இஸ்ரேல் செவிலியர் துறையில் தொழில் பெறுவதற்காக யாருக்கும் பணம் கொடுத்து ஏமாறுவதை தவிர்க்குமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement