• Nov 21 2024

வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்!

Chithra / Nov 4th 2024, 8:33 am
image

 

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 240,109 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அவர்களில் 99,939 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும் 70,396 பயிற்றப்பட்ட பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் எண்ணிக்கை 240,109 ஆகும். 

இதில் 99,939 பெண் தொழிலாளர்கள் மற்றும் 142,170 ஆண் தொழிலாளர்கள் உள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 70,396 பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் வௌிநாட்டு வேலைக்காக நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்களில் 62,177 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 8,219 பெண் தொழிலாளர்கள்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 2,565,365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்  இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 240,109 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.அவர்களில் 99,939 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும் 70,396 பயிற்றப்பட்ட பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் எண்ணிக்கை 240,109 ஆகும். இதில் 99,939 பெண் தொழிலாளர்கள் மற்றும் 142,170 ஆண் தொழிலாளர்கள் உள்ளனர்.குறித்த காலப்பகுதியில் 70,396 பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் வௌிநாட்டு வேலைக்காக நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 62,177 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 8,219 பெண் தொழிலாளர்கள்.இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 2,565,365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement