• Feb 11 2025

பெண்களின் பிரதிநிதித்துவ சித்தாந்தத்தை அங்கீகரித்துள்ள இலங்கை மக்கள் - நிலாந்தி சுட்டிக்காட்டு

Chithra / Nov 17th 2024, 1:03 pm
image

 

இலங்கையில் உள்ள வாக்காளர்கள், சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் சித்தாந்தத்தை மதித்து அங்கீகரித்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹாச்சி (Nilanthi Kottahachchi) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் சட்டங்களும் கொள்கைகளும் தொகுக்கப்படும் இடம் நாடாளுமன்றமாகும், 

அத்துடன் பொருளாதாரம் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் இடமும் நாடாளுமன்றமாகும் .

இந்தநிலையில், நாடாளுமன்றத்திலும், உள்ளூராட்சி மட்டத்திலும் கூட அதிகமான பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற சித்தாந்தம் இருந்து வந்தது.

இந்த சிந்தாந்தத்தை இலங்கை மக்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் அங்கீகரித்து, அதிக பெண்களை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்துள்ளனர் என நிலாந்தி  தெரிவித்துள்ளார். 

பெண்களின் பிரதிநிதித்துவ சித்தாந்தத்தை அங்கீகரித்துள்ள இலங்கை மக்கள் - நிலாந்தி சுட்டிக்காட்டு  இலங்கையில் உள்ள வாக்காளர்கள், சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் சித்தாந்தத்தை மதித்து அங்கீகரித்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹாச்சி (Nilanthi Kottahachchi) தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.ஒரு நாட்டின் சட்டங்களும் கொள்கைகளும் தொகுக்கப்படும் இடம் நாடாளுமன்றமாகும், அத்துடன் பொருளாதாரம் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் இடமும் நாடாளுமன்றமாகும் .இந்தநிலையில், நாடாளுமன்றத்திலும், உள்ளூராட்சி மட்டத்திலும் கூட அதிகமான பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற சித்தாந்தம் இருந்து வந்தது.இந்த சிந்தாந்தத்தை இலங்கை மக்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் அங்கீகரித்து, அதிக பெண்களை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்துள்ளனர் என நிலாந்தி  தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement