உலகில் அதிக சிறுத்தைகள் வாழும் காடுகளில் பட்டியலில் இலங்கையின் குமன தேசிய பூங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குமனா தேசிய பூங்காவில் நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் நாற்பத்தொரு சிறுத்தைகள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அடர்த்திக்கு மேலதிகமாக ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் இடஞ்சார்ந்த பரவல் மற்றும் செயல்பாட்டு முறைகளிலும் அவதானம் செலுத்தியுள்ளனர்.
இலங்கையின் காடுகளில் வாழும் மிகப்பெரிய சிறுத்தை இனமான Panthera Pardus Kotiy, நாட்டில் மிகவும் அழிந்து வரும் ஒரு உயிரினமாக இருப்பதால், இந்த ஆராய்ச்சித் தரவு பாதுகாப்பாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு முயற்சிகளில் உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
உலகில் அதிகம் சிறுத்தைகள் கொண்ட இடமாக இலங்கையின் குமன தேசிய பூங்கா உலகில் அதிக சிறுத்தைகள் வாழும் காடுகளில் பட்டியலில் இலங்கையின் குமன தேசிய பூங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.குமனா தேசிய பூங்காவில் நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் நாற்பத்தொரு சிறுத்தைகள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இந்த ஆய்வில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அடர்த்திக்கு மேலதிகமாக ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் இடஞ்சார்ந்த பரவல் மற்றும் செயல்பாட்டு முறைகளிலும் அவதானம் செலுத்தியுள்ளனர்.இலங்கையின் காடுகளில் வாழும் மிகப்பெரிய சிறுத்தை இனமான Panthera Pardus Kotiy, நாட்டில் மிகவும் அழிந்து வரும் ஒரு உயிரினமாக இருப்பதால், இந்த ஆராய்ச்சித் தரவு பாதுகாப்பாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு முயற்சிகளில் உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.