• Apr 19 2025

பதவிக்கு ஏற்றாட்போல் ஜனாதிபதி நடந்துக் கொள்ள வேண்டும்! விமர்சிக்கும் மஹிந்த கட்சி

Chithra / Apr 17th 2025, 10:26 am
image


அரச தலைவர் என்ற வகையில், பதவிக்கு ஏற்றாட்போல் ஜனாதிபதி நடந்துக் கொள்ள வேண்டும். யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது   என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்  தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை நாங்கள் கைப்பற்றுவோம். 

அரசியல் ரீதியில் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை தெரிவு செய்தால் மாத்திரமே  உள்ளுராட்சிமன்ற அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு கருத்தாகும். 

அரச தலைவர் என்ற வகையில் பதவிக்கு ஏற்றாட்போல் ஜனாதிபதி நடந்துக் கொள்ள வேண்டும்.

யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

பதவிக்கு ஏற்றாட்போல் ஜனாதிபதி நடந்துக் கொள்ள வேண்டும் விமர்சிக்கும் மஹிந்த கட்சி அரச தலைவர் என்ற வகையில், பதவிக்கு ஏற்றாட்போல் ஜனாதிபதி நடந்துக் கொள்ள வேண்டும். யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது   என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்  தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை நாங்கள் கைப்பற்றுவோம். அரசியல் ரீதியில் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை தெரிவு செய்தால் மாத்திரமே  உள்ளுராட்சிமன்ற அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு கருத்தாகும். அரச தலைவர் என்ற வகையில் பதவிக்கு ஏற்றாட்போல் ஜனாதிபதி நடந்துக் கொள்ள வேண்டும்.யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement