• Apr 19 2025

வேலணை மக்களிடம் மாட்டிய கால்நடை திருடர் குழு!

Chithra / Apr 17th 2025, 10:25 am
image


நீண்ட காலமாக தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியில் நேற்று இரவு   இடம்பெற்றுள்ளது

வேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டுத்தனமாக பிடிக்கப்பட்ட ஆடுகள், வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியிலுள்ள சந்தேக நபராக கருதப்படும் ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுருந்தன.

இந்நிலையில் குறித்த ஆடுகளை வெளியூரைச் சேர்ந்த சிலரின் ஒத்துழைப்புடன் நேற்று இரவு வாகனம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு சட்டவிரோதமாக கடத்தி செல்லும் முயற்சியில் குறித்த குழு இறங்கியுள்ளது.


இதன்படி குறித்த திருட்டுக் குழு நேற்று இரவு 8 மணியளவில்  6 ஆடுகளை குறித்த வாகனத்தில் ஏற்றும் சந்தர்ப்பத்தில் அதை சிலர் கண்டு சந்தேகித்து சம்பவம் தொடர்பில் ஊரிலுள்ள முகியஸ்தர்கள் மற்றும் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததுடன் அந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளானர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற ஆடுகளின் உரிமையாளர்கள் குறித்த இடத்துக்கு வந்து மக்களது ஒத்துழைப்புடன் வாகனத்தில் ஏற்றப்பட்ட 6 ஆடுகள் மற்றும் இரண்டு சந்தேக நபர்களையும் பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் பிடிபட்ட இருவரையும் பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளானர்.

குறித்த இரு சந்தேக நபர்களுடன் 6 ஆடுகள் மற்றும் மகேந்திரா வாகனமும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.


வேலணை மக்களிடம் மாட்டிய கால்நடை திருடர் குழு நீண்ட காலமாக தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியில் நேற்று இரவு   இடம்பெற்றுள்ளதுவேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டுத்தனமாக பிடிக்கப்பட்ட ஆடுகள், வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியிலுள்ள சந்தேக நபராக கருதப்படும் ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுருந்தன.இந்நிலையில் குறித்த ஆடுகளை வெளியூரைச் சேர்ந்த சிலரின் ஒத்துழைப்புடன் நேற்று இரவு வாகனம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு சட்டவிரோதமாக கடத்தி செல்லும் முயற்சியில் குறித்த குழு இறங்கியுள்ளது.இதன்படி குறித்த திருட்டுக் குழு நேற்று இரவு 8 மணியளவில்  6 ஆடுகளை குறித்த வாகனத்தில் ஏற்றும் சந்தர்ப்பத்தில் அதை சிலர் கண்டு சந்தேகித்து சம்பவம் தொடர்பில் ஊரிலுள்ள முகியஸ்தர்கள் மற்றும் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததுடன் அந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளானர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற ஆடுகளின் உரிமையாளர்கள் குறித்த இடத்துக்கு வந்து மக்களது ஒத்துழைப்புடன் வாகனத்தில் ஏற்றப்பட்ட 6 ஆடுகள் மற்றும் இரண்டு சந்தேக நபர்களையும் பிடித்துள்ளனர்.குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் பிடிபட்ட இருவரையும் பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளானர்.குறித்த இரு சந்தேக நபர்களுடன் 6 ஆடுகள் மற்றும் மகேந்திரா வாகனமும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement