• Nov 26 2024

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி - சிறிதுங்க ஜயசூரிய அதிரடி..!samugammedia

mathuri / Jan 2nd 2024, 9:27 pm
image

தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாத்திரம் இருப்பதோடு அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம் எனவும் அதையும் மீறி அவ்வாறான முயற்சி இடம் பெற்றாலும் இந்தியாவின் கோரிக்கையின் பிரகாரம் அது கடைசியில் கைவிடப்படும் என்றும் ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

"அரசியல் களத்தில் நாடி பிடித்து பார்ப்பதற்காக அவ்வவ்போது இடம்பெறும் ஏற்பாடுகள் போலவே தமிழ் பொது வேட்பாளர் விடயமும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலானது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியாகவுள்ள நிலையில், நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம் தொடர்பில் பேசி பயனில்லை. 

மாலைத்தீவில் நடைபெற்றது போல மொட்டுக்கட்சிக்கு சீனாவும் சஜித் தரப்பிற்கு இந்தியாவும் பின்புலமாக இருக்கிறது. தற்போது பொது வேட்பாளர் பற்றி பேசுபவர்கள் இந்திய கோரிக்கையை ஏற்று இந்திய சார்பு வேட்பாளரையே ஆதரிப்பார்கள்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

"தேசிய இன பிரச்சனைக்கு சுய நிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வு முன்வைக்க பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது கட்சி உள்ளது. எனவே தமிழர்களின் சுய நிர்ணய உரிமைகளை மையப்படுத்தி எமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறங்குவர்" எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி - சிறிதுங்க ஜயசூரிய அதிரடி.samugammedia தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாத்திரம் இருப்பதோடு அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம் எனவும் அதையும் மீறி அவ்வாறான முயற்சி இடம் பெற்றாலும் இந்தியாவின் கோரிக்கையின் பிரகாரம் அது கடைசியில் கைவிடப்படும் என்றும் ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "அரசியல் களத்தில் நாடி பிடித்து பார்ப்பதற்காக அவ்வவ்போது இடம்பெறும் ஏற்பாடுகள் போலவே தமிழ் பொது வேட்பாளர் விடயமும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலானது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியாகவுள்ள நிலையில், நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம் தொடர்பில் பேசி பயனில்லை. மாலைத்தீவில் நடைபெற்றது போல மொட்டுக்கட்சிக்கு சீனாவும் சஜித் தரப்பிற்கு இந்தியாவும் பின்புலமாக இருக்கிறது. தற்போது பொது வேட்பாளர் பற்றி பேசுபவர்கள் இந்திய கோரிக்கையை ஏற்று இந்திய சார்பு வேட்பாளரையே ஆதரிப்பார்கள்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். "தேசிய இன பிரச்சனைக்கு சுய நிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வு முன்வைக்க பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது கட்சி உள்ளது. எனவே தமிழர்களின் சுய நிர்ணய உரிமைகளை மையப்படுத்தி எமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறங்குவர்" எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement