• Dec 12 2024

ஐந்து வருடங்களில் குறைவடைந்த இலங்கையின் தேயிலை ஏற்றுமதி

Tharun / May 26th 2024, 5:29 pm
image

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது கடந்த ஐந்து வருடங்களில் 44 ஆயிரம் மெற்றிக் தொன்களுக்கு மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த நாட்டில் தேயிலை உற்பத்தி பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் மொத்த விவசாய ஏற்றுமதி வருமானத்தில் 51 சதவீதம் தேயிலை தொழிலில் இருந்து பெறப்படுவதாகவும் அதனால் அந்த தொழில் வீழ்ச்சி சுமார் 2.5 மில்லியன் எனவும் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்றும் பேராசிரியர் கூறினார்.

தேயிலை கைத்தொழில் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காண வேண்டியது இந்த தருணத்தில் அரசாங்கத்தின் பொறுப்பாகுமென குறிப்பிட்டார். 

2019ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தியானது 3 இலட்சம் மெற்றிக் தொன்களை விட அதிகமாக இருந்த போதிலும், 2021 ஆம் ஆண்டளவில் அது 2 இலட்சத்து 99 ஆயிரமாக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த ஐந்து வருடங்களாக தேயிலையின் உற்பத்தி இவ்வாறு குறைந்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து வருடங்களில் குறைவடைந்த இலங்கையின் தேயிலை ஏற்றுமதி இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது கடந்த ஐந்து வருடங்களில் 44 ஆயிரம் மெற்றிக் தொன்களுக்கு மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.இதனால் இந்த நாட்டில் தேயிலை உற்பத்தி பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின் மொத்த விவசாய ஏற்றுமதி வருமானத்தில் 51 சதவீதம் தேயிலை தொழிலில் இருந்து பெறப்படுவதாகவும் அதனால் அந்த தொழில் வீழ்ச்சி சுமார் 2.5 மில்லியன் எனவும் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்றும் பேராசிரியர் கூறினார்.தேயிலை கைத்தொழில் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காண வேண்டியது இந்த தருணத்தில் அரசாங்கத்தின் பொறுப்பாகுமென குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தியானது 3 இலட்சம் மெற்றிக் தொன்களை விட அதிகமாக இருந்த போதிலும், 2021 ஆம் ஆண்டளவில் அது 2 இலட்சத்து 99 ஆயிரமாக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த ஐந்து வருடங்களாக தேயிலையின் உற்பத்தி இவ்வாறு குறைந்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement