• Apr 30 2024

இலங்கை இளைஞர்களுக்கு அடித்த அதிஸ்டம் - அவுஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Aug 6th 2023, 4:46 pm
image

Advertisement

 இளைஞர்களுக்கு வேலை வாய்பினை பெறுவதற்கு ஏற்ற பயிற்சியினை வழங்குவதற்கு உதவ அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.

குறிப்பாக விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபடுபவர்களுக்கான வருவாயை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்பினை வழங்க தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலிய நிதி உதவியுடன் முன்னெடுக்கும் இந்த திட்டம் கல்வி அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தேச திட்டத்திற்கு ஏற்றவகையில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய பிரதி உயர் ஸ்தானிகர் கடந்த வாரம் பொலன்னறுவையில் நவீன சமையல் பயிற்சி நிலையம் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.

நவீன சமையல் கலையை தமது வாழ்வாதாரமாக மேற்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு இந்த தொழிற்பயிற்சி பெரும் பக்கபலமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் நடவடிக்கைகளுக்கும் பொருத்தமான திறன் மேம்பாட்டிற்கு அவுஸ்திரேலியா நீண்ட காலமாக ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தற்போது படிப்படியாக சுற்றுலாத்துறை இலங்கையில் மேம்பட்டு வருவதனால், குறிப்பிட்ட இந்த பயிற்சியினை மேற்கொள்பவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புக்களை பெறமுடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இலங்கை இளைஞர்களுக்கு அடித்த அதிஸ்டம் - அவுஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பு samugammedia  இளைஞர்களுக்கு வேலை வாய்பினை பெறுவதற்கு ஏற்ற பயிற்சியினை வழங்குவதற்கு உதவ அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.குறிப்பாக விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபடுபவர்களுக்கான வருவாயை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்பினை வழங்க தீர்மானித்துள்ளது.அவுஸ்திரேலிய நிதி உதவியுடன் முன்னெடுக்கும் இந்த திட்டம் கல்வி அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த உத்தேச திட்டத்திற்கு ஏற்றவகையில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய பிரதி உயர் ஸ்தானிகர் கடந்த வாரம் பொலன்னறுவையில் நவீன சமையல் பயிற்சி நிலையம் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.நவீன சமையல் கலையை தமது வாழ்வாதாரமாக மேற்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு இந்த தொழிற்பயிற்சி பெரும் பக்கபலமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் நடவடிக்கைகளுக்கும் பொருத்தமான திறன் மேம்பாட்டிற்கு அவுஸ்திரேலியா நீண்ட காலமாக ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை, தற்போது படிப்படியாக சுற்றுலாத்துறை இலங்கையில் மேம்பட்டு வருவதனால், குறிப்பிட்ட இந்த பயிற்சியினை மேற்கொள்பவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புக்களை பெறமுடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement