• May 17 2024

ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள் இம்முறை பருத்தித்துறையில்...!யாழிலிருந்து வாகனப் பேரணிக்கும் ஏற்பாடு...!

Sharmi / Apr 30th 2024, 2:20 pm
image

Advertisement

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வுகள் இம்முறை பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் இவ்வாண்டுக்கான தொழிலாளர் தினம்  பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேநேரம், எமது மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள எமது கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இப்பேரணியானது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி வழியாக சென்று பருத்தித்துறை நகரை அடையவுள்ளது. 

இதன்பின்னர் பலநோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழிலாளர் தின நிகழ்வுகள் நடைபெறும்.

குறிப்பாக தொழிற் சங்ககங்களின் பிரதிநதிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி சிறப்புரைகளை நிகழ்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள் இம்முறை பருத்தித்துறையில்.யாழிலிருந்து வாகனப் பேரணிக்கும் ஏற்பாடு. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வுகள் இம்முறை பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவிக்கையில்,எமது கட்சியின் இவ்வாண்டுக்கான தொழிலாளர் தினம்  பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதேநேரம், எமது மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள எமது கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பேரணியானது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி வழியாக சென்று பருத்தித்துறை நகரை அடையவுள்ளது. இதன்பின்னர் பலநோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழிலாளர் தின நிகழ்வுகள் நடைபெறும்.குறிப்பாக தொழிற் சங்ககங்களின் பிரதிநதிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி சிறப்புரைகளை நிகழ்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement