• May 17 2024

உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு காலக்கேடு...! தவறினால் இனி சட்டம் பாயும்...!விடுக்கப்பட்ட எச்சரிக்கை...!

Sharmi / Apr 30th 2024, 2:32 pm
image

Advertisement

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சகல இடங்களிலும் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அதனைக் கையாளும் நிறுவனங்கள் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவில் பிரதேசத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் சகல நிறுவனங்களும் அதனைக் கையாளும் நிறுவனங்களும் எதிர்வரும் 2024.05.31ஆம் திகதிக்கு முன்னர் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அத்துடன் உணவுகளை தயாரிப்பவர்களும் அதனைக் கையாளுபவர்களும் மேற்குறித்த திகதிக்கு முன்னர் கட்டாயமாக மருத்துவச் சான்றுதழினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

உரிய காலத்துக்குள் பதிவு செய்தல் மற்றும் மருத்துவச் சான்றுதழினைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உவைஸ் மேலும் தெரிவித்தார்.

உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு காலக்கேடு. தவறினால் இனி சட்டம் பாயும்.விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சகல இடங்களிலும் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அதனைக் கையாளும் நிறுவனங்கள் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பொத்துவில் பிரதேசத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் சகல நிறுவனங்களும் அதனைக் கையாளும் நிறுவனங்களும் எதிர்வரும் 2024.05.31ஆம் திகதிக்கு முன்னர் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அத்துடன் உணவுகளை தயாரிப்பவர்களும் அதனைக் கையாளுபவர்களும் மேற்குறித்த திகதிக்கு முன்னர் கட்டாயமாக மருத்துவச் சான்றுதழினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய காலத்துக்குள் பதிவு செய்தல் மற்றும் மருத்துவச் சான்றுதழினைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உவைஸ் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement